For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Neeraj Chopra - மாபெரும் சாதனை படைத்த நீரஜ் சோப்ரா.. 2174 நாட்களாக தொடர்ந்து 23 தொடர்களில் பதக்கம்!

டெல்லி: 2024 டைமண்ட் லீக் தொடரில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடம் பிடித்து மாபெரும் சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். தொடர்ந்து 2174 நாட்களாக அவர் எந்த ஈட்டி எறிதல் தொடரில் பங்கேற்றாலும், அதில் முதல் மூன்று இடங்களில் இடம் பிடித்து இருக்கிறார். அதிலும், அவர் தொடர்ந்து 23 தொடர்களில் ஈட்டி எறிதலில் முதல் மூன்று இடங்களில் இடம் பிடித்து மாபெரும் சாதனையை படைத்து இருக்கிறார்.

டைமண்ட் லீக் தொடரில் அவர் 89.49 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்த டைமண்ட் லீக் தொடரில் 2024 ஒலிம்பிக் தொடரில் வெண்கலம் வென்ற கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.61 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். நீரஜ் சோப்ராவுக்கு இடுப்பில் காயம் உள்ளது. அதனுடன் தான் அவர் ஒலிம்பிக் தொடரிலும் பங்கேற்றார்.

Olympics 2024 Neeraj Chopra

ஒலிம்பிக் தொடர் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் தற்போது அதே காயத்துடன் டைமண்ட் லீக் தொடரிலும் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்து இருக்கிறார் நீரஜ் சோப்ரா. ஆனால், அவரது செயல்பாடு முதல் ஐந்து முறையும் மோசமாகவே இருந்தது. ஒலிம்பிக் தொடரிலும் அவர் தனக்கு கிடைத்த ஆறு வாய்ப்புகளில் ஐந்து முறை தவறு செய்ததால் அவரது வீசுதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐந்தாவது முறை அவர் வீசிய 89.45 மீட்டர் தூரம் அவருக்கு ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது. கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு நிலை தான் டைமண்ட் லீக் தொடரிலும் நடந்தது.

அவர் தனது முதல் நான்கு வாய்ப்புகளில் 84 மீட்டர் தூரத்தை கூட எட்டவில்லை. அதனால், அவரால் முதல் ஐந்து இடங்களில் கூட இடம் பெற முடியவில்லை. மற்ற வீரர்கள் அவருக்கு மேல் இடம் பெற்றனர். பின்னர், ஐந்தாவது முறை 85.58 மீட்டர் தூரம் வீசினார். அதன் மூலம், முதல் மூன்று இடங்களில் இடம் பிடித்ததால் அவருக்கு ஆறாவது வாய்ப்பு கிடைத்தது. ஆறாவது வாய்ப்பு என்பது முதல் ஐந்து முயற்சிகளில் முதல் மூன்று இடங்களில் இடம் பிடித்த வீரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கூடுதல் வாய்ப்பை பெற்ற நீரஜ் சோப்ரா தனது கடைசி முயற்சியில் 89.49 மீட்டர் தூரம் வீசி வெள்ளி பதக்கத்தை வென்றார். ஈட்டி எறிதல் வீரர்களால் தொடர்ந்து ஒரே மாதிரியான தூரத்திற்கு ஈட்டியை வீச முடியாது. சில தொடர்களில் அதிக தூரம் வீசும் அவர்கள் அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே அதிக தூரம் வீச முடியாமல் சிரமப்படுவார்கள். ஆனால், நீரஜ் சோப்ரா அதற்கு விதிவிலக்காக இருக்கிறார்.

அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து 85 மீட்டர்களுக்கு மேல் ஈட்டியை வீசி வருகிறார். கடைசி சில தொடர்களில் அவர் 89 மீட்டர் என்பதை தனது வழக்கமாகவே மாற்றிக் கொண்டு இருக்கிறார். அதன் காரணமாக 2174 நாட்களாக தான் பங்கேற்கும் தொடர்களில் எல்லாம் முதல் மூன்று இடங்களில் இடம் பிடித்து தொடர்ந்து பதக்கம் வென்று வருகிறார். 2024 ஒலிம்பிக் தொடரில் 89.45 மீட்டர் தூரம் வீசிய அவர், டைமண்ட் லீக் தொடரில் காயத்துடன் 89.49 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

Story first published: Friday, August 23, 2024, 8:27 [IST]
Other articles published on Aug 23, 2024
English summary
Diamond League 2024: Neeraj Chopra consistently winning medals in last 2174 days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+