Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உசேன் போல்ட்டுக்கு இப்படி ஒரு பிளேபாய் முகமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

ரியோ டி ஜெனிரோ: மின்னல் வேகத்தில் ஓடி ஒலிம்பிக்கில் தங்க பதக்கங்களை அள்ளிய உசேன் போல்ட் காதலியை ஏமாற்றிவிட்டு, பிளே பாய் போல பிற பெண்களுடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் மீடியாக்களில் வெளியாகியுள்ளன.

ரியோ ஓலிம்பிக்கில் 4x100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை தனது 30வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அந்த கொண்டாட்டத்தின்போது பெண் ஒருவருடன் உசேன் போல்ட், ஆபாச நடனம் ஆடிய காட்சி வெளியானது. இதற்கு மறுநாளே மற்றொரு பெண்ணுடன் படுக்கையில் மிகவும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானது. அந்த பெண்ணின் கன்னத்தில் உசேன் போல்ட் முத்தமிடும் காட்சிகளும் உள்ளன.

படுக்கையை பகிர்ந்த அந்த பெண், பெயர் ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த 20 வயதாகும் கல்லூரி மாணவி ஜேடி துர்தே என தெரியவந்துள்ளது. இந்த போட்டோக்களை பெருமைக்காக அந்த பெண்ணே சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளார்.

உசேன் போல்டும் பிற ஆண்களை போலத்தான் 'பெர்பார்மன்ஸ்' செய்ததாக அந்த மாணவி சர்டிபிகேட்டும் கொடுத்துள்ளது இதில் ஹைலைட்.

நாட்டியமாடியதும், படுக்கையை பகிர்ந்ததுமான இவ்விரு பெண்களும் வேறு ஆகும். மேலும், உசேன் போல்ட் 26 வயதாகும் கசி பென்னட் என்பவரை காதலிப்பதாக, அவரின் தங்கை சமீபத்தில்தான் கூறியிருந்தார். எனவே காதலி தவிர்த்து மேலும் இரு பெண்களுடன் அடுத்தடுத்த நாட்களில் உசேன் போல்ட் உல்லாசமாக இருந்துள்ளது போட்டோக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

இப்போது கசி பென்னட்தான் தனது காதல் தொடருகிறதா அல்லது முறிந்துவிட்டதா என உறுதிப்படுத்த வேண்டும்.

Story first published: Tuesday, August 23, 2016, 11:33 [IST]
Other articles published on Aug 23, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+