Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீபிகாவை 2015ல் கைப்பிடிக்கிறார் திணேஷ் கார்த்திக்...

சென்னை: ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலுக்கும், கிரிக்கெட் வீரர் திணேஷ் கார்த்திக் ஆகியோருக்கு சென்னையில் ஹோட்டலில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இருவரும் 2015ம் ஆண்டு திருமணம் மூலம் இல்லற வாழ்க்கையில் இணையவுள்ளனர்.

திணேஷுக்கு இது 2வது திருமணம். தீபிகாவுக்கு இதுதான் முதல் திருமணம்.

நிகிதா- திணேஷ்

நிகிதா- திணேஷ்

நிகிதாதான் திணேஷ் கார்த்திக்கின் முதல் மனைவி. இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தவர்கள்.

மனக்கசப்பால் முறிந்த முதல் திருமணம்

மனக்கசப்பால் முறிந்த முதல் திருமணம்

ஆனால் இந்தத் திருமணம் சில மனக்கசப்புகளால் முறிந்து போனது. இருவரும் முறைப்படி விவாகரத்தும் பெற்று விட்டனர்.

தீபிகாவுடன் காதல்

தீபிகாவுடன் காதல்

இந்த நிலையில்தான் தீபிகா மீது காதலில் விழுந்தார் திணேஷ்.

இங்கிலாந்தில் சந்திப்பு

இங்கிலாந்தில் சந்திப்பு

இங்கிலாந்தில் வைத்துத்தான் இவர்களது சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இருவரும் காதலித்து வந்தனர்.

இரு வீட்டார் சம்மதம்

இரு வீட்டார் சம்மதம்

இவர்களின் காதலுக்கும், திருமணத்திற்கும் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

சென்னை ஹோட்டலில்

சென்னை ஹோட்டலில்

சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது.

டிவிட்டரில் போட்டோ

டிவிட்டரில் போட்டோ

நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டனராம். நிச்சயதார்த்தத்திற்குப் பின்னர் தீபிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் போட்டுள்ளார் திணேஷ்.

2015ல் தி்ருமணம்

2015ல் தி்ருமணம்

தற்போது தீபிகாவும், திணேஷும் தத்தமது விளையாட்டில் பிசியாக இருப்பதால் திருமணத்தை 2015ம் ஆண்டுக்குக் கொண்டு போய் விட்டனர்.

Story first published: Sunday, December 1, 2013, 15:51 [IST]
Other articles published on Dec 1, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+