Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Olympics 2020: வெறும் 70 நிமிடங்களில்.. ஜப்பானின் கடைசி நம்பிக்கையை.. ஊதித்தள்ளிய ஜோகோவிச்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் டென்னிஸ் பிரிவில், ஜப்பானின் ஒரே நம்பிக்கை தூள் தூளானது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா காலக் கட்டத்தில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிடையே தங்கப்பதக்கம் வெல்வதில் கடும் போட்டி நிலவுகிறது.

கெய் நிஷிகோரி

கெய் நிஷிகோரி

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இன்று ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் செர்பியாவின் உலகின் நம்பர்.1 நோவக் ஜோகோவிச் மற்றும் ஜப்பானின் நம்பிக்கை நட்சத்திரமான கெய் நிஷிகோரி ஆகியோர் மோதினர். இதில், ஜோகோவிச் எந்தவித சிரமும் இன்றி கேஷுவலாக போட்டியை வென்றார்.

வெறும் 70 நிமிடங்களில்

வெறும் 70 நிமிடங்களில்

ஆம்! 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் நிஷிகோரியை ஊதித்தள்ளிவிட்டார் ஜோகோவிச். வெறும் 70 நிமிடங்களில் இந்த போட்டி முடிவுக்கு வந்தது. போட்டி தொடங்கியதில் இருந்தே சர்வீஸில் பின்னியெடுத்தார் ஜோகோவிச். நிஷிகோரியால் கடைசி வரை மீண்டு எழுந்து வர முடியவில்லை.டென்னிஸ் பிரிவில் ஜப்பான் இவரைத் தான் மலை போல் நம்பியிருந்தது. ஆனால், ஜோகோவிச் முன் சரண்டராவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிகிறது.

வெண்கலம்

வெண்கலம்

எனினும், ஜோகோவிச் இதுவரை ஒலிம்பிக்கில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. கடந்த 2008ம் ஆண்டு ஒலிம்பிக்சில் வெண்கலப்பதக்கம் வென்றதே அவரது சிறந்த பங்களிப்பாகும். ஆகையால், இந்த முறை நிச்சயம் ஒலிம்பிக் பதக்கம் வென்றுவிட வேண்டும் என்பதில் ஜோகோவிச் மிகத் தீவிரமாக உள்ளார்.

அமெரிக்கா இரண்டாமிடம்

அமெரிக்கா இரண்டாமிடம்

இன்று (ஜுலை.29) பிற்பகல் 3 மணி நிலவரப்படி, தங்கம் 14, வெள்ளி 6, வெண்கலம் 9 என மொத்தம் 29 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. அதேபோல், தங்கம் 13 வெள்ளி 14, வெண்கலம் 10 என மொத்தம் 37 பதக்கங்களுடன் அமெரிக்கா 2வது இடத்தில் உள்ளது. தங்கம் 13, வெள்ளி 4, வெண்கலம் 5 என மொத்தம் 22 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்தில் உள்ளது. 8 தங்கம், 2 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4 வது இடத்தில் உள்ளது.

Story first published: Thursday, July 29, 2021, 18:50 [IST]
Other articles published on Jul 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+