பர்கரைப் போட்டு 'மொக்கும்' இந்தக் 'குட்டி' யாருன்னு தெரியுமா?
மும்பை: படு க்யூட்டாக டேபிளில் உட்கார்ந்து அம்மா செய்து கொடுத்த பர்கரை ஒரு கை பார்க்கும் இந்தக் குட்டிப் பையன் யார் தெரியுமா?.. சாட்சாத் விராத் கோஹ்லிதான் இது.
தனது சிறு வயது போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார் கோஹ்லி. அவரது வீட்டில் தயாரிக்கப்பட்ட பர்கரை சாப்பிட்டபோது எடுத்த படமாம் இது.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஏன் சிறு வயதில் குண்டாக இருந்தேன் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. ஆச்சரியமும் அடையத் தேவையில்லை. எனக்கு எதிரில் எதை வைத்தாலும் சாப்பிட்டு விடுவேன் அப்போதெல்லாம் என்று கூறியுள்ளார் கோஹ்லி.
இந்தப் படம் செம ஹிட்டாகியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்டுகள் பதிவாகியுள்ளன.
Story first published: Wednesday, July 20, 2016, 21:48 [IST]
Other articles published on Jul 20, 2016


Click it and Unblock the Notifications