அடடே.. உங்களை விட இந்த நாய் நல்லா விளையாடுதேய்யா.. சூப்பர் வாலிபால்!
சென்னை: விளையாட்டுப் பிரியர்களுக்கு இது இன்னொரு சூப்பர் வீடியோ.. இதில் விளையாடுவது ஒரு நாயும்.. இன்னொரு நபரும். பார்க்கவே படு சூப்பராக இருக்கிறது.
தனித்திருங்கள். கொரோனாவை விரட்டியடியுங்கள் என்று ஒவ்வொரு நாடும் வலியுறுத்தி வருகிறது. இதனால் யாரும் எங்கேயும் போக முடியாமல் வீட்டோடு முடங்கிப் போயுள்ளனர். விளையாட்டுக்களும் கூட ரத்து செய்யப்பட்டு விட்டன.
இதனால் விதம் விதமாக விளையாடிய விளையாட்டுக்களை இப்போது டிவி, சோசியல் மீடியாவில்தான் பார்த்து ரசிக்க வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு நிலைமை மாறிப் போயிருச்சு.

வாலிபால் ஆடும் நாய்
இந்த நிலையில்தான் இந்த வீடியோ நமது கண்ணில் பட்டது. இதைப் போட்டிருப்பவர் தன்டர்போல்ட் என்பவர். அவரும் அவரது வீட்டு நாயும் வாலிபால் விளையாடுவது போல உள்ளது இது. பெரிய தோட்டம் போல இருக்கிறது. அதில்தான் இருவரும் வாலிபால் விளையாடுகின்றனர். தனிமையாக இருப்பதால் போரடித்துப் போய் நாயுடன் பால் விளையாட்டில் இறங்கி விட்டார் இவர்.

வாயால் சூப்பர் கேட்ச்
சும்மா சொல்லக் கூடாது.. அவருக்குப் போட்டியாக நாயும் அருமையாக பந்தை அடிக்கிறது. தனது வாயால் அது எட்டி எட்டி அழகாக தூக்கி தள்ளுகிறது. அதைப் பிடிக்க முடியாமல் நம்மவர்தான் சிரமப்படுகிறார் பல நேரங்களில். கடைசியில் பந்தை அடிக்கப் போய் கோட்டுக்கு வெளியே போய் விழுகிறார். ஆனால் நாய் பந்தை கரெக்டாக வாயால் கேட்ச் பிடித்து கவ்விக் கொள்கிறது.
கருப்பு நாயின் பொறுப்பு
பல நேரங்களில் பந்தை படு க்யூட்டாக அது வாயால் முட்டித் தள்ளுவதைப் பார்க்கும்போது புரபஷனல் விளையாட்டு வீரர்கள் கூட இப்படி ஆட மாட்டார்களே என்று ஆச்சரியப்பட வைக்கிறது. அப்படி அழகான பயிற்சியை அந்த நாய்க்குக் கொடுத்துள்ளார்கள் போலும். அதனால் வருகிற பந்தையெல்லாம் அழகாக நெட்டித் தள்ளுகிறது அந்த நாய். கருப்பாக இருந்தாலும் அது பொறுப்பாக விளையாடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்னொரு போட்டியிலும் சூப்பர்
இதே நபர் இன்னொரு வீடியோவும் போட்டுள்ளார். அது நான்கு பேர் கலந்து கொண்டு ஆடும் வாலிபால் போட்டி. அதிலும் இந்த நாய் ஒரு போட்டியாளராக இருக்கிறது. இது பழைய வீடியோவாக இருக்கலாம் அல்லது இந்த வீடியோவில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினராக இருக்க வேண்டும். இந்த போட்டியிலும் கூட நாய் அழகாக ஆடுகிறது. வருகிற ஒரு பந்தைக் கூட அது தவற விடவில்லை. அருமையாக அடித்துத் தள்ளுகிறது.


Click it and Unblock the Notifications