Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"தங்கப் பதக்கம் கைநழுவியது ஏன்?".. ஒரே நாளில் 2 வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவன் சிறப்புப் பேட்டி

நகோயா: ஜப்பானின் ஐச்சி நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஒரே நாளில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் பிரிவில் சோனம் மஸ்கர் மற்றும் விதர்சா வினோத் ஆகியோருடன் இணைந்து இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற தனிநபர் பிரிவிலும் 252.4 புள்ளிகள் குவித்து மற்றொரு வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதில் ஜப்பான் வீராங்கனை ஹினாட்டா தாய்ச்சி 253.0 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, வெறும் 0.6 புள்ளிகள் வித்தியாசத்தில் இளவேனில் தங்கத்தைத் தவறவிட்டார். அதிலும் 20வது சுற்று வரை முதல் இடத்தில் இருந்த அவர் கடைசி 2 சுற்றுகளில் தடுமாறி தங்கப் பதக்கத்தை தவறவிட்டார்.

Elavenil Valarivan Interview Asian Games 2026 Tamil Nadu Shooter Speaks On Winning 2 Silver Medals

இதற்கு முன்பு 2010 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இளவேனிலின் குருவான ககன் நரங் தனிநபர் மற்றும் குழுப் பிரிவில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார். சரியாக 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது வழியில் வந்த மாணவியான இளவேனிலும் அதே சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த 2018 ஜகார்த்தா ஆசிய போட்டியில் இறுதிச்சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்த இளவேனில், தற்போது 2 வெள்ளிப் பதக்கங்களுடன் எழுச்சி கண்டுள்ளார். இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு அவர் மைகேல் (Mykhel) தளத்துக்கு அளித்த நேரடிப் பேட்டி:

கேள்வி: குழுப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இளவேனில் வாலறிவன்: சோனம் மஸ்கர் மற்றும் விதர்சா வினோத் ஆகியோருடன் ஒரே அணியில் விளையாடியதை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். அவர்கள் இருவரும் தங்களது மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்தினர். அவர்களின் முழுமையான பங்களிப்பு இல்லாமல் இந்த வெள்ளிப் பதக்கம் நிச்சயமாக சாத்தியமாகி இருக்காது. தனிநபர் பிரிவு இறுதிப்போட்டி தொடங்கும் முன்பே நாங்கள் குழுப் பிரிவில் வெள்ளி வென்றுவிட்டோம் என்பது எங்களுக்குத் தெரிந்துவிட்டது. ஏற்கனவே ஒரு பதக்கம் வென்றுவிட்டோம் என்ற மனநிறைவோடும், அடுத்து 2-வது பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற உற்சாகத்தோடும் நான் தனிநபர் இறுதிப்போட்டிக்குள் சென்றேன்.

கேள்வி: தனிநபர் இறுதிப்போட்டியில் 20 சுற்றுகள் வரை முன்னிலையில் இருந்தும் கடைசி நேரத்தில் தங்கம் கைநழுவியது எப்படி?

இளவேனில் வாலறிவன்: இறுதிப்போட்டியில் பதக்கத்தை நெருங்க நெருங்க, எனது கவனம் துப்பாக்கி சுடும் நுட்பத்தில் இருந்து சற்றே திசைமாறி பதக்கத்தை நோக்கிய சிந்தனைக்குச் சென்றுவிட்டது என்பதை நான் உணர்ந்தேன். அதை நினைத்து நான் யோசிக்கத் தொடங்கினேன். ஆனால் என் கவனத்தை மீண்டும் ஒருமுகப்படுத்தி பழைய நிலைக்கு நான் திரும்புவதற்குள், எனக்கு வெறும் 2 வாய்ப்புகள் மட்டுமே மீதமிருந்தன. நேரம் கடந்துவிட்டதால் தங்கம் நழுவிப் போனது.

வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் ஜோசப் விஜய்.. கிளம்பும் சர்ச்சை

வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் ஜோசப் விஜய்.. கிளம்பும் சர்ச்சை

கேள்வி: 2018 ஜகார்த்தா ஆசிய போட்டியில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு இந்த இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் ஈடுகட்டிவிட்டதாக நினைக்கிறீர்களா?

இளவேனில் வாலறிவன்: ஒரு போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு அல்லது இழப்புக்கு மற்றொரு போட்டியின் வெற்றி எப்போதுமே ஈடாகாது என்றே நான் கூறுவேன். ஆனால், அன்று ஜகார்த்தாவில் எனக்கு ஏற்பட்ட அந்தப் பின்னடைவு, எனது விளையாட்டு வாழ்க்கையின் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் எனக்குத் தேவையான மிக முக்கியமான ஒரு கற்றல் அனுபவம் என்றே கருதுகிறேன். அப்படி ஒரு பாடம் எனக்குக் கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அன்று கற்றுக் கொண்ட அந்தப் பாடம்தான் இன்று என்னை மிகச் சிறந்த வீராங்கனையாக மாற்ற பெரிதும் உதவியது.

Story first published: Monday, September 21, 2026, 11:51 [IST]
Other articles published on Sep 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+