Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து வீரரை கட்டிப் பிடித்து கிஸ் கொடுத்து கூல் செய்த காதலி.. வைரல் ஆன புகைப்படம்

லண்டன்: இங்கிலாந்து - ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் ஐஸ்லாந்து அணி அட்டகாசமாக வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு ஷாக் கொடுத்தது. இந்த அதிர்ச்சியில் இருந்த இங்கிலாந்து வீரர் டேல் அல்லிக்கு அவரது காதலி முத்தம் கொடுத்து ஆறுதல் கூறிய புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.

இன்டர்நெட்டில் இந்தப் படம் படு வேகமாக பிரபலமாகி விட்டது. அந்த வீரரை விட அவரது காதலிதான் படு வேகமாக பிரபலமாகியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கும், ஐஸ்லாந்து அணிக்கும் இடையிலான இப்போட்டியில் ஐஸ்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இங்கிலாந்தை போட்டித தொடரை விட்டே விரட்டியடித்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் மீள முடியவில்லை. அனைவரும் சோகத்துடன் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ரூபி மே

ரூபி மே

அப்போது இங்கிலாந்து வீரர் டேல் அல்லி தனது காதலி ரூபி மே அமர்ந்திருந்த பகுதியை நோக்கிச் சென்றார். எழுந்து நின்றபடி தனது காதலரை எதிர்நோக்கியிரந்த ரூபி, அல்லி அருகே வந்ததும் அவரை அப்படியே கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அவருக்கு ஆறுதல் கூறினார். அவரைத் தேற்றினார்.

கட்டிப்பிடித்து முத்தம்

கட்டிப்பிடித்து முத்தம்

இருவரும் மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டனர். இந்தக் காட்சியை புகைப்படக் கண்கள் தவறாமல் புகைப்படம் எடுத்துத் தள்ளின. இதுதான் தற்போது வைரல் ஆகியுள்ளது.

உள்ளாடை மாடல்

உள்ளாடை மாடல்

டேல் அல்லியின் இந்தக் காதலிக்கு 21 வயதாகிறது. அல்லிக்கு வயது 20. ரூபி மே ஒரு மாடல் அழகி ஆவார். உள்ளாடை விளம்பரங்களுக்குப் போஸ் கொடுக்கும் மாடல் அழகி. பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

வளர்ந்து வரும் அல்லி

வளர்ந்து வரும் அல்லி

கால்பந்து உலகில் வளர்ந்து வரும் வீரர் அல்லி. அவரது காதலியால் தற்போது அல்லியும் பிரபலமாகியுள்ளார். இருவரும் ஒரே புகைப்படம் மூலமாக தற்போது உலகப் புகழையும் அடைந்துள்ளனர்.

அக்காவுக்கு அல்லி.. தங்கைக்கு பிராட்

அக்காவுக்கு அல்லி.. தங்கைக்கு பிராட்

ரூபி மேயின் சகோதரி பீலி ரோஸ் மிட்சல். இவர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராடின் காதலி என்பது கூடுதல் தகவலாகும். அக்கா கால்பந்து வீரரையும், தங்கை கிரிக்கெட் வீரரையும் காதலிப்பது இங்கிலாந்து ரசிகர்களுக்கு டபுள் "தமாகா"வாக மாறியுள்ளது.

Story first published: Wednesday, June 29, 2016, 12:05 [IST]
Other articles published on Jun 29, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+