லண்டன்: ஃபீஃபா உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்களின் காதலிகள் மற்றும் மனைவிகள் அவர்களுடன் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்களின் மனைவிகள் மற்றும் காதலிகள் அவர்களுடன் சேர்ந்து பிரேசிலுக்கு செல்ல அந்நாட்டு கால்பந்து அசோசியேஷன் தடை விதித்தது. வீரர்களின் மனைவிகளும், காதலிகளும் போட்டிகளை காண விரும்பினால் தனியாக பயணம் செய்து பிரேசில் செல்லலாம். அப்படி சென்றாலும் வீரர்களை குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்த்து பேச முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
வீரர்களின் கவனம் சிதறாமல் இருக்கத் தான் இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரில் இங்கிலாந்து வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் பெண் ஒருவர் நிர்வாணமாக பால்கனியில் நின்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முதல் போட்டியில் இத்தாலியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி இன்று உருகுவே அணியுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.