லண்டன்: இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் சுண்டர்லேண்ட் அணியை அதிரடியாக வீழ்த்தியது அர்சனல் எப்சி அணி.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் அர்சனல் மற்றும் சுண்டர்லேண்ட் அணிகள் மோதின. இதில் தொடக்கத்தில் அர்சனல் அணியின் அல்கெசி முதல் கோலை அடித்தார்.

இதற்கு பதிலடியாக சண்டர்லேண்ட் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தது. தொடர்ந்து விளையாடிய அர்சனில் ஆலிவர் ஜிரோட் அதிரடியாக 2 கோல்களையும் அலெக்சி மற்றொரு கோலையும் அடிக்க 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை ருசித்தது அர்சனல் அணி.
மற்றொரு ஆட்டத்தில் பர்ன்லி அணிக்கு எதிராக மான்செஸ்டர் யுனைட்டெட் அணி மோதியது. இந்த போட்டியின் போது மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜோஸ் மரினோ, அண்டர் ஹெரேரா ஆகியோர் நடுவர்களால் வெளியேற்றப்பட்டன. மொத்தம் 37 முறை மான்செஸ்டர் அணி கோலடிக்க முயற்சித்தது. ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. பர்ன்லி அணியின் கோல்கீப்பர் அசத்தலாக கோல்களை தடுத்தார்.
மான்செஸ்டர் சிட்டி அணிக்கும் வெஸ்ட் புரோம்விச் அணிக்கும் இடையேயான ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் அக்குயேரோ அதிரடியாக 2 கோல்களை அடித்தார். பிற்பகுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியின் குண்டோங்கானும் 2 கோல்களை அடித்து மான்செஸ்டர் அணியை வெற்றி பெற வைத்தனர்.
இதேபோல் கிறிஸ்டர் பேலஸ் அணியை எதிர்கொண்ட லிவர் புல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை எட்டியது.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியின் 10-வது வாரத்தின் முதல் நாள் போட்டியின் முடிவுகள்:
சுண்டர்லேண்ட் 1-4 அர்சனல்
வாட்போர்ட் 1-0 ஹூல் சிட்டி
வெஸ்ட் புரோம்விச் 0-4 மான்செஸ்டர் சிட்டி
மான்செஸ்டர் யுனைடெட் 0-0 பர்ன்லி
ஹாட்ஸ்புர் 1-1 லெய்செஸ்டர் சிட்டி
மிட்டில்ஸ்ப்ரோ 2-0 போர்னேமெளத்
கிறிஸ்டல் பேலஸ் 2-4 லிவர்புல்