Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சும்மாதானே இருக்கோம்.. வாங்க சுட்டு சுட்டு விளையாடலாம்.. அசர வைக்கும் இஷா சிங்

டெல்லி: இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இஷா சிங், கிடைத்துள்ள இந்த லாக்டவுன் கேப்பை சரியாகப் பயன்படுத்தி பயிற்சியில் மும்முரமாக உள்ளார்.

இந்தியாவின் இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இஷா சிங். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக எங்கும் போக முடியாமல் உள்ளார். இந்த 15 வயது இளம் புயல் இப்போது தனது வீட்டிலேயே பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.

கடந்த 2019 நவம்பரில் நடந்த ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் இஷா சிங். இந்த நிலையில் தற்போது கொரோனாவால் போட்டிகள் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே இருக்கிறார்.

பிரதமர் நிதிக்கு உதவி

பிரதமர் நிதிக்கு உதவி

சமீபத்தில்தான் பிரதமர் கேர்ஸ் நிதியத்திற்கு ரூ. 30,000 நிதியுதவி அளித்திருந்தார் இஷா சிங். இந்த நிலையில் தற்போது தனது வீட்டில் டிரை பிராக்டிஸை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நான் தினசரி எனது ரொட்டீன் பயிற்சிகளை செய்து வருகிறேன். காலை 6 மணிக்கு எழுந்திருக்கிறேன். 7 மணி முதல் 9 மணி வரை பயிற்சி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

படிப்பு முக்கியம் அமைச்சரே

படிப்பு முக்கியம் அமைச்சரே

பிறகு பாடம் படிக்கிறேன். ஒர்க் அவுட் செய்கிறேன். அதன் பின்னர் எனது 2வது செஷன் பயிற்சி ஆரம்பித்து விடும். பிரதமர் நிதிக்கு நான் நிதியுதவி கொடுத்துள்ளேன். எல்லோரும் கொடுங்க. எல்லோரும் வீட்டிலேயே இருங்க. அதுதான் நமக்கு பாதுகாப்பு. என்னைப் போலவே எல்லோரும் வீட்டிலேயே தங்கியிருந்து நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம் என்று இஷா சிங் கூறியுள்ளார்.

தங்கம் வென்ற இளம் புலி

தங்கம் வென்ற இளம் புலி

இஷா சிங் 17 வயதுக்குட்பட்டோருக்கான கேலோ இந்தியா யூத் கேம்ஸின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற சாதனையாளர் ஆவார். இளம் வயதிலேயே சாதனைகளுக்குச் சொந்தக்காரரான இஷா சிங்கின் இலக்கு எதிர்காலத்தில் ஒலம்பிக்கில் அசத்த வேண்டும் என்பதுதான். 2018 தேசியப் போட்டியில் இவர் சீனியர், ஜூனியர் மற்றும் இளையோர் பிரிவில் தங்கம் வென்றவர் என்பது கூடுதல் செய்தியாகும்.

ரெஸ்ட்டும் பயிற்சியும்

ரெஸ்ட்டும் பயிற்சியும்

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது எந்தப் போட்டியும் நடைபெறவில்லை. விளையாட்டு வீராங்கனைகளும், வீரர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஆனால் யாருமே சோம்பேறித்தனமாக இருக்கவில்லை. உடற்பயிற்சி செய்தபடியும், வீட்டு வேலை செய்தபடியும், சமூக வலைதளங்களில் பேசியபடியும் உள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Friday, April 24, 2020, 18:21 [IST]
Other articles published on Apr 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+