For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

EXCLUSIVE- வினேஷ் போகத் மீது தவறே இல்லை! முடி வெட்டினால் மொட்டை தான் ஆக முடியும்! மருத்துவர் காட்டம்

மும்பை : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் 50 கிலோ எடிங்ப பிரிவில் இறுதிப் போட்டி வரை வினேஷ் போகத் வந்தார். எனினும், 100 கிராம் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததாக கூறி, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கையும், விளையாட்டு துறைக்கான சர்வதேச தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், மைக்கேல் தளத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்த விளையாட்டு துறை அறுவை சிக்ச்சை மருத்துவர் மனித் ஆரோரா, பயிற்சியாளர் குழுவை சாடி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், வினேஷ் போகத் விவகாரத்தில் என்ன தவறு இருக்கிறது என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அது முழுக்க முழுக்க வித்தியாசமான ஒரு பிரச்சனையாகும்.

sports news vinesh phogat mirabhai chanu olympic 2024

வினேஷ் போகத் விவகாரத்தில் அவர் மீது எந்த தவறும் இல்லை. அவரை சரியாக மருத்துவக் குழு கையாளவில்லை என்று நினைக்கின்றேன். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சுமார் 200 ல் இருந்து 300 வீரர்கள் எடை சார்ந்த போட்டியில் விளையாடுகிறார்கள்.

அவர்கள் அனைவரும் தங்கள் எடையை சரியாக கண்காணித்த நிலையில், வினேஷ் போகத் மட்டும் தோற்றுவிட்டால் என்றால் அது அவருடைய தவறு கிடையாது. நிச்சயம் மருத்துவக் குழு சரியாக கண்காணிக்கவில்லை என்று தான் அர்த்தம். வினேஷ் போகத் எடையை அவர்களுடைய மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து அதற்கு தேவையான மாற்று உணவுகளை வழங்கி இருக்க வேண்டும்.

அப்படி எதுவும் செய்த மாதிரி எனக்கு தெரியவில்லை. நான் ஒரு பேட்டியில் பார்த்தபோது, மருத்துவ குழு உறுப்பினர் ஒருவர் நாங்கள் வினேஷ் போகத்தின் முடியை வெட்டி எடையை குறைக்க முயற்சி செய்தோம் என்றெல்லாம் கூறினார்கள். இதையெல்லாம் கேட்கும் போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. முடியை வெட்டி தான் எடையை குறைக்க வேண்டும் என்றால் இந்த தொடரில் விளையாடிய அனைத்து வீரர்களுமே மொட்டை தலையுடன் தான் இருப்பார்கள்.

வீரர்களுடன் செல்லும் பயிற்சியாளர் குழு நாம் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை கவனம் செலுத்த வேண்டும் நமது வரிப்பணத்தில் தான் பயிற்சியாளர் குழுவினருக்கு சம்பளம் கிடைக்கின்றது. நாம் தான் ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் செல்வதற்கே நிதி தருகிறோம்.

ஒரு வரி செலுத்தும் நபராக எனக்கு பதக்கம் எவ்வாறு தவறியது என்பதற்கான சரியான பதில் பயிற்சியாளர் குழுவிடம் என்று வர வேண்டும். ஏனென்றால் மருத்துவ குழு மற்றும் பயிற்சியாளர் குழு தவறு செய்ததால் தான் வினேஷ் போகத் தகுதி நீக்கம் தழுவி இருக்கிறார் என்று அரோரா கூறினார்.

Story first published: Thursday, August 22, 2024, 20:33 [IST]
Other articles published on Aug 22, 2024
English summary
Exclusive - Vinesh Phogat Medical and coaches crew should answerable to the country says Doctor arora EXCLUSIVE- வினேஷ் போகத் மீது தவறே இல்லை! முடி வெட்டினால் மொட்டை தான் ஆக முடியும்! மருத்துவர் காட்டம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+