For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்

Recommended Video

Corrina Schumacher on Shumacher's health | பல குற்றச்சாட்டுகளுக்கு ஷூமாக்கரின் மனைவி பதில்

பெர்ன் : பார்முலா கார் ஒன் பந்தயத்தில் 7 முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் மைக்கேல் ஷூமாக்கர். கடந்த 2013ல் பனிச்சறுக்கு விளையாட்டின்போது விபத்து ஏற்பட்டு கோமாவிற்கு சென்ற அவர், மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளதாக அவர் மனைவி கொரினா தெரிவித்துள்ளார்.

மைக்கேல் ஷூமாக்கரின் உடல்நிலை குறித்த தகவல்களை அவரது மனைவி வெளியுலகிற்கு தெரியாமல் மறைப்பதாக அவரது முன்னாள் மேனேஜரின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ஷூமாக்கரின் மனைவி கொரினா இவ்வாறு கூறியுள்ளார்.

மைக்கேலின் விருப்பத்தின்படியே அவரது உடல்நிலை குறித்த தகவல்களை அந்தரங்கமாக பேணுவதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்துள்ளார்.

5 முறை தொடர் சாம்பியன்

5 முறை தொடர் சாம்பியன்

பார்முலா ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவர். இவர் 1994 மற்றும் 1995ல் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றதுடன் கடந்த 2000 முதல் 2004 வரை 5 முறை தொடர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை பட்டியலில் இடம்பெற்றவர்.

விபத்தில் படுகாயம் அடைந்து கோமா

விபத்தில் படுகாயம் அடைந்து கோமா

இந்நிலையில் கடந்த 2013 டிசம்பர் மாதத்தில் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கிய மைக்கேல், கோமாவிற்கு சென்றார்.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

இந்நிலையில் அவர் கோமாவில் இருந்து விடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் அதிகமாக வெளியில் வராததால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இதனிடையே, அவருக்கு சொந்தமான லேக் ஜெனிவாவில் உள்ள வீட்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

உண்மை மறைக்கப்படுகிறது

உண்மை மறைக்கப்படுகிறது

இந்நிலையில், மைக்கேல் ஷூமாக்கரின் உடல்நிலை குறித்த உண்மை நிலை மறைக்கப்படுவதாகவும், அதை வெளியில் தெரிவிக்க அவரது மனைவி கொரினா ஷூமாக்கர் பயப்படுவதாகவும் அவரது நீண்டகால மேனேஜர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதுகாப்பான கரங்களில் ஷூமாக்கர்

பாதுகாப்பான கரங்களில் ஷூமாக்கர்

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஷூமாக்கரின் மனைவி கொரினா, அவர் சிறந்த பாதுகாப்பான கரங்களில் உள்ளதாக தெரிவித்துள்ளார். தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் அவருக்கு அளித்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்தரங்கம் பேணப்படுகிறது

அந்தரங்கம் பேணப்படுகிறது

தன்னுடைய உடல்நிலை குறித்த அந்தரங்கத்தை பேணுமாறு ஷூமாக்கர் விரும்புவதாக தெரிவித்த கொரினா, அவரின் விருப்பத்தை புரிந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மீண்டு வருவார்... மீண்டும் வருவார்...

மீண்டு வருவார்... மீண்டும் வருவார்...

50 வயதான ஷூமாக்கர் குறித்த ஆவணப்படத்தில் இந்த மாதத்தின் முதல்வாரத்தில் பேசிய அவரது முன்னாள் மேனேஜர் வில்லி வெப்பர், அவர் மிகுந்த மனவலிமை கொண்டவர் என்றும் அவர் தன்னுடைய நிலையில் இருந்து மீண்டு வருவார் என்றும் தெரிவித்திருந்தார்.

வெப்பர் குற்றச்சாட்டு

வெப்பர் குற்றச்சாட்டு

தான் ஷூமாக்கரை சந்திக்க முயன்றதாகவும், அவரது தற்போதைய நிலை குறித்து அறிய விருப்பம் தெரிவித்ததாகவும் ஆனால் கொரினா அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் வெப்பர் மேலும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 19, 2019, 18:13 [IST]
Other articles published on Nov 19, 2019
English summary
Michael Schumacher is in the best hands - Wife Corinna reply back to Manager claims
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+