For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்!

வெல்லிங்டன் : ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பிரபல எஃப்1 கார் பந்தய பந்தய வீரர் நிக்கி லௌடா தனது 70வது வயதில், திங்கள்கிழமை அன்று மரணம் அடைந்தார்.

மூன்று முறை ஃபார்முலா 1 சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிக்கி லௌடா கடந்த சில மாதங்களுக்கு முன் ஃப்ளு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

F1 Legend Niki Lauda, three time formula one champion passed away

அதைத் தொடர்ந்து உடல்நலம் குன்றி காணப்பட்ட அவர், திங்கள்கிழமை அன்று மரணமடைந்ததாக அவரது குடும்பம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை காரணமாக இரு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபார்முலா 1 பந்தயங்களில் கடந்த 40 ஆண்டுகளாக தவிர்க்க முடியாத நபராக வலம் வந்தவர் நிக்கி லௌடா. கடந்த 1971ஆம் ஆண்டு முதல் ஃபார்முலா பந்தயங்களில் பங்கேற்று வரும் அவர், 1975, 1977 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

F1 Legend Niki Lauda, three time formula one champion passed away

1976ஆம் ஆண்டு பெரும் விபத்தில் இருந்து மோசமான காயங்களுடன் உயிர் தப்பினார். 1979இல் திடீரென தன் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி அளித்தார். எனினும், பின்னர் 1982இல் மீண்டும் ஃபார்முலா பந்தயத்தில் களம் கண்டு தன் மூன்றாம் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1985இல் பந்தய வீரராக ஓய்வு பெற்ற நிக்கி லௌடா, 1990களில் ஃபெராரி பந்தய அணியின் ஆலோசகர் மற்றும் மேலாளராக பணிபுரிந்தார். பின் 2001-02 காலகட்டத்தில் ஜாகுவார் அணியின் அணித் முதல்வராக இருந்தார்.

இறுதியாக 2012 முதல் மெர்சிடஸ் அணியின் குழுத் தலைவராக பதவி வகித்து, அந்த அணியின் சமீபத்திய பெரும் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

ஃபார்முலா கார் பந்தய வட்டாரத்தில் பலரும் நிக்கி லௌடாவின் இறப்புக்கு தங்கள் இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Story first published: Tuesday, May 21, 2019, 12:32 [IST]
Other articles published on May 21, 2019
English summary
F1 Legend Niki Lauda, three time formula one champion passed away
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+