கட்டில் பிரச்னை: உடலுறவு செய்ய முடியுமா? வீடியோ வெளியிட்ட ஒலிம்பிக் வீரர்.. வாயடைத்த போன ரசிகர்கள்!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்களின் செக்ஸ் கனவுக்கு ஆப்பு வைக்கப்பட்டதா என்ற விவாததம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

வரும் ஜுலை 23ம் தேதி முதல் ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன.

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த போட்டிகள் நடைபெறுவதால் பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படி வீரர்கள் தங்குவதற்காக ஒரு கிராமமே உருவாக்கப்பட்டுள்ளது.

தொடக்கமே இப்படியா?.. மணிஷ் பாண்டே செய்த தவறு.. ஷிகர் தவானுக்கு வந்த தலைவலி.. கடுப்பான ரசிகர்கள்! தொடக்கமே இப்படியா?.. மணிஷ் பாண்டே செய்த தவறு.. ஷிகர் தவானுக்கு வந்த தலைவலி.. கடுப்பான ரசிகர்கள்!

புகார்கள்

புகார்கள்

ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்த வீரர், வீராங்கனைகள் சமீபத்தில் வைத்த குற்றச்சாட்டு ஒன்று பெரும் கவனத்தை ஈர்த்தது. அதாவது தங்கும் அறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டில்கள் தரமற்றதாக இருப்பதாகவும், கார்ட்போர்டு எனப்படும் பொருள் கொண்டு தரமற்றதாக உருவாக்கியிருப்பதாக புகார் எழுந்தது. வீரர், வீராங்கனைகள் யாரும் உடலுறவு வைத்துக்கொள்ள கூடாது என்பதற்காக ஒலிம்பிக் அமைப்பு இதனை செய்துள்ளதாக தெரியவந்தது.

 உடலுறவுக்கு ஆப்பு

உடலுறவுக்கு ஆப்பு

விளையாட்டு வீரர்களுக்கு உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் என்பதாலும், உடலுறவில் ஈடுபடுவது மன அழுத்தம் குறைய உதவும் என்பதாலும் இதுப்போன்ற போட்டி காலங்களில் அதிகளவில் அவர்கள் உடலுறவில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த முறை கொரோனா அச்சுறுத்தல் நிலவுவதால், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கார்ட் போர்ட் பொருளை கொண்டு கட்டில்கள் செய்யப்பட்டன எனக்கூறப்பட்டது. யாரேனும் அதில் உடலுறவு கொள்ள முயற்சித்தால் கட்டில் உடைந்து கீழே விழ வேண்டியது தான் என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.

விளக்கம்

விளக்கம்

இந்நிலையில அவை அனைத்திற்கும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜிம்னானிஸ்டிக் வீரர் ரைஸ் மெக்கிளனகன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தனக்கு ஒதுக்கப்பட்ட கட்டிலில் ஏறி மிக வேகமாக குதித்துள்ளார். ஆனால் கட்டிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. பின்னர் அதன் உறுதித் தன்மையைப் பற்றி விளக்கி வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 உண்மை பின்னணி

உண்மை பின்னணி

இதற்கு முக்கியமான காரணம் மறுசுழற்சி தான். ஒலிம்பிக்ஸ் போட்டி சில காலம் தான் நடக்கும் என்பதால் அதன் பின் இந்த கட்டில்கள் பேப்பர் தயாரிக்க பயன்படுத்தப்படும், பெட்கள் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்பதால் இப்படி ஒரு முறையை கொண்டு வந்துள்ளனர்.

நீங்கிய அச்சம்

வீரர்களின் செக்ஸ் கனவுக்கு ஒலிம்பிக் அமைப்பு ஆப்பு வைத்துவிட்டதாக கூறி இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வந்த நிலையில், கார்ட்போர்ட் கட்டில் எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதற்கான விளக்கம் தெரியவந்துள்ளது. எனவே இனி வீரர்கள் எந்தவித அச்சமும் இன்றி உடலுறவில் ஈடுபடலாம் என தெரிவித்து வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Fact Check: Is beds in the Tokyo Olympics Village is for Anti-Sex? Gymnast Rhys Mcclenaghan Reveals
Story first published: Tuesday, July 20, 2021, 17:21 [IST]
Other articles published on Jul 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X