சென்னை: செஸ் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்த நிலையில் அவருக்கு ஆறுதல் கூறும் வகையிலும், செஸ் பற்றியும் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 1.5 - 0.5 என்ற புள்ளிக் கணக்கில் தமிழக வீரர் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார். இதனால் பிரக்ஞானந்தாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. இதற்கு சிஎஸ்கே அணியின் கேப்டன், நாங்கள் சிறந்த கம்பேக்கை கொடுப்போம். அதுதான் எங்களின் அடையாளம் என்று சொல்வதை, இந்திய ரசிகர்கள் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

அதேபோல் வழக்கமாக கிரிக்கெட் மட்டுமே இந்தியாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிலையில், திடீரென செஸ் உலகக்கோப்பைத் தொடரில் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால், ரசிகர்கள் பலரும் செஸ் விளையாட்டை பற்றி அறிந்து கொண்டு பார்க்க தொடங்கினர். ஆனாலும் சில சந்தேகங்கள் ரசிகர்களுக்கு புரியாமல் இருந்தது.

அதனை கிண்டல் செய்யும் வகையில் மாவீரன் படத்தில் நடிகர் யோகி பாபு, இந்தியில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தை எப்படி படிப்பது என்று தெரியாமல் படித்தது போல் சொல்லி, முருகன் என்று மேலே ஒரு கோடு போட்டு கையெழுத்து போட்டு பகுத் அச்சா என்று சொல்லுவார். அதுபோல் செஸ் பற்றி எதுவும் புரியாமல் ரசிகர்கள் கமெண்ட் செய்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற மாதிரி குபீர் சம்பவம்.
அதேபோல் செஸ் விளையாட்டு கடந்த 2 நாட்களாக பிரபலமாக இருந்த நிலையில், பலரும் செஸ் விளையாடுவதை போல் புகைப்படங்களை பதிவிட்டனர். ஆனால் அவரின் நகர்வுகள் எதுவும் பெரிதாக இல்லை. அதனை கிண்டல் செய்யும் வகையில், 3 டிராகன்கள் வெறித்தனமாக பார்க்கும் புகைப்படத்தை வைத்து மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் வெறித்தனமாக இருக்கும் டிராகன்களுக்கு கீழ் நான் எப்படி விளையாடுவேன் என்று என் மனதில் எனவும் எதிரணியை எப்படி பார்ப்பேன் என்று அடுத்த டிராகனுக்கு கீழும், கடைசியாக காமெடியாக இருக்கும் டிராகனுக்கு கீழ் "எனது செஸ் நகர்வுகள்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஃபன் ரகம்.