Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாயில் விசிலுடன் வசீகரிக்கும் பிரேசில் பெண் கால்பந்து நடுவர் உலியானா...!

ரியோ டிஜெனிரோ: ஆணாதிக்கம் மிகுந்த கால்பந்த உலகில் இதோ இன்னும் ஒரு பெண் கலக்க வந்துள்ளார். இவர் பிரேசிலைச் சேர்ந்த 25 வயதான இளம் உதவி நடுவர். பெயர் பெர்னான்டா கொலம்போ உலியானா.

இவர் சிறிது காலமாகவே உதவி நடுவராக இருந்து வந்த போதிலும், பிரபலமான கோபா டோ பிரேசில் போட்டித் தொடரில் பங்கேற்றதன் மூலம் இணையதளங்களில் இவரை சிலாகித்து எழுதி வருகின்றனர். இவரது விதம் விதமான புகைப்படங்களும் வலம் வர ஆரம்பித்துள்ளன.

பிரேசிலில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இப்போது இன்டர்நெட்டில் உலியானா குறித்த பேச்சுக்களும், பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிய ஆரம்பித்துள்ளன.

வெகு அழகானவர் உலியானா. ஆனால் அதை விட அவரது கால்பந்து மீதான காதலும், நடுவராக ஸ்டிரிக்ட்டாக இருப்பதும்தான் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதற்காகவே அவர் அதிகம் பேசப்படுகிறார்.

சமீபத்தில்தான் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஹெலீனா கோஸ்டா என்ற பெண் பிரான்ஸ் நாட்டின் கிளர்மான்ட் பூட் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். தற்போது அவரது வழியில் உலியானா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Fernanda Colombo Uliana turns heads as assistant referee in Brazil Cup match

உலியானாவின் திறமைகள், அவரது அழகு, கால்பந்துக் காதல் என இன்டர்நெட்டில் கால்பந்து ரசிகர்கள் சிலாகித்து எழுதி வரும் நிலையில் இதை விட பெரிய லெவலுக்குப் போக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று உறுதியுடன் கூறுகிறார் உலியானா...

Story first published: Saturday, May 10, 2014, 16:40 [IST]
Other articles published on May 10, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+