For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்.. சாதனை படைத்த பிரக்ஞானந்தா.. கட்டி அழுத தாய்.. செஸ்ஸில் நெகிழ்ச்சி

பாகு : உலகக்கோப்பை செஸ் தொடர் அஸர் பைஜான் நாட்டின் பெக் நகரில் நடைபெற்றது. இதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சக இந்திய வீரர் அர்ஜுனை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கால் இறுதியில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் பிரக்ஞானந்தாவும் அர்ஜுனும் சமனில் இருந்தனர். இதனை அடுத்து வெற்றியை தீர்மானிக்க கூடிய ட்ரை பிரேக்கர் போட்டி நடந்தது.

FIDE Chess world cup - Praggnanandhaa mother reaction after his son win

இதில் ரேபிட் செஸ் என்ற முறையில் ஆட்டம் நடந்தது. இதில் வீரர்கள் மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தி விளையாட வேண்டும். ஒரு கட்டத்தில் மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பிரக்ஞானந்தா முன்னிலை பெற்ற நிலையில் sudden death என்ற முறை கடைபிடிக்கப்பட்டது. இந்தச் சுற்றில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றார்கள் என்று அறிவிக்கப்படும்.

ஆனால் இதிலும் தான் வெற்றி பெற்றார். தொடர்ந்து ஏழு சுற்றுகள் போட்டி நடைபெற்றதால் பிரக்ஞானந்தாவின் தாயார் போட்டி நடைபெறும் இடத்தில் மிகவும் பதற்றமாக காணப்பட்டார். ஒரு கட்டத்தில் அவர் கண்ணீர் விட்டு அழுத் தொடங்கினார்.ஆனால் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றவுடன் அவருடைய தாய் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தனது மகனைக் கட்டி அணைத்து பாசத்தை வெளிப்படுத்தினார்.

FIDE Chess world cup - Praggnanandhaa mother reaction after his son win

இதனை அடுத்து சர்வதேச பல சேனல்களுக்கு பிரக்ஞானந்தா பேட்டி கொடுத்ததை அவருடைய தாய் பெருமையாக பார்த்த தருணம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் என்ற திருக்குறளுக்கு ஏற்ப பிரக்ஞானந்தாவின் தாயார் தன் மகனை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் போட்டியில் அரை இறுதி சுற்று வரை சென்ற ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

இதன் மூலம் கேண்டிடேட்ஸ் தொடருக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார். அந்த தொடரில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுவிடுவார். இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த் போல் அவரும் உலக சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Thursday, August 17, 2023, 23:39 [IST]
Other articles published on Aug 17, 2023
English summary
FIDE Chess world cup - Praggnanandhaa mother reaction after his son win ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்.. சாதனை படைத்த பிரக்ஞானந்தா.. கட்டி அழுத தாய்.. செஸ்ஸில் நெகிழ்ச்சி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+