பாகு : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அரை இறுதிக்கு செல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்க ராபிட் ரவுண்ட் என மின்னல் வேக செஸ் போட்டி நடைபெற்றது.
இதில் பிரக்ஞானந்தா போட்டிக்கு தாமதமாக வந்து 40 வினாடிகளை வீணடித்தும் வெற்றி பெற்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ராபிட் ரவுண்டில் நேரம் என்பது பொன் போன்றது. ஏனென்றால் ஒவ்வொரு சுற்றுக்கும் 25 நிமிடம் 10 நிமிடம் ஐந்து நிமிடம் என ஆட்டத்தின் கால அளவு குறைக்கப்படும். ஒவ்வொரு வீரர்களும் ஒரு நகர்த்தலை 10 வினாடிக்குள் முடிக்க வேண்டும். எப்படி இருக்க பிரக்யானந்தா இறுதி ரவுண்டில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தாமதமாக போட்டி விளையாடும் களத்திற்கு வந்ததால் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தார்கள்.

பிரக்ஞானந்தா வருவதற்குள் போட்டி ஏற்கனவே துவங்கி விட்டது. பிரக்ஞானந்தா 40 வினாடிகளை இழந்ததால் அவர் தோற்றுவிடுவார் என அனைவரும் நினைத்த நிலையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பிரஞ்ஞானந்தா வெற்றி பெற்று சாக் கொடுத்தார்.

இது குறித்து போட்டி முடிந்த பிறகு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன காரணம் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இது குறித்து பேசிய பிரக்ஞானந்தா ஐந்து நிமிடம் இடைவேளை கொடுத்திருந்தார்கள். இதனால் நான் பாத்ரூமுக்கு சென்று வந்தேன். அப்போது மிகவும் சோர்வாக இருந்ததால் முகத்தை தண்ணீரால் கழுவினேன்.
ஆனால் இதையெல்லாம் செய்து முடிப்பதற்குள் ஐந்து நிமிடம் கடந்து விட்டத. இதனை அடுத்து போட்டியில் நான் 40 வினாடிகளை வீணடித்து விட்டேன். இருந்தும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூலால கூறினார். பிரக்ஞானந்தாவின் இந்த பதில் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.