"தங்க மகன்" மாரியப்பனுக்கு திரை உலகம் வாழ்த்து- ரூ50,000 பரிசு அறிவித்த வாசன், கருணாஸ்!
சென்னை: பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு திரை உலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் ஆகியொர் தலா ரூ50,000 பரிசுத் தொகை அறிவித்துள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்ததே பெரும் சாதனையாக போற்றப்பட்டது. தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் நடைபெற்று வருகின்றன.

சரித்திரம் படைத்த மாரியப்பன்..
இதில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் சேலம் பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, தங்கப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்திருக்கிறார். விபத்து ஒன்றில் காலை இழந்தவர் மாரியப்பன் தங்கவேலு.

வாசன் பரிசு அறிவிப்பு
தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ரூ50,000 பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
திரை உலகம்
அதேபோல் நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சான், சூர்யா, சிவகார்த்திகேயன், சந்தானம், பாடகி சின்மயி உள்ளிட்ட திரை பிரபலங்களும் மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்தும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் பாராட்டியுள்ளார்.
வசுந்தராஜே சிந்தியா..
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா, ஆர்ஜே பாலாஜி ஆகியோரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்கள் மாரியப்பன் தங்கவேலுவை கொண்டாடி வருகின்றன.

கருணாஸ்
இதேபோல் நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸும் ரூ50,000 பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications