புரோ கபடி முதல் சுற்று இன்றுடன் முடிகிறது
டெல்லி: 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் 5வது சீசனின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடக்கின்றன. டெங்குவுக்கு எதிராக தினமும் ஒரு புது புது தகவல்களை அள்ளிவிடும் அரசியல்வாதிகளும், நடிகர்களை போல, கடந்த மூன்று மாதங்களாக இந்த 12 அணிகளும் மாறி மாறி விளையாடின.
புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. இந்தத் தொடரில் முதல் முறையாக களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி, கடைசி நேர சொதப்பல்களால், பல வெற்றி வாய்ப்புகளை இழந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது.

ஜூலை 28ல் துவங்கிய இந்த சீசனுக்கான முதல் போட்டியில் இருந்து பல விறுவிறுப்பான காட்சிகளும் அரங்கேறின. இன்று நடக்கும் கடைசி லீக் போட்டிகளில் தெலுகு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகளும், புனேரி பல்தான் - குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.
ஏ பிரிவில் இருந்து குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பல்தான் அணிகளும் பி பிரிவில் பெங்கால் வாரியர்ஸ், பட்னா பைரேட்ஸ் அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன.
வரும் 23ல் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற உள்ளன. இன்று நடக்கும் போட்டியின் அடிப்படையில், புள்ளிப் பட்டியில் பெறும் இடங்களைப் பொறுத்து பிளே ஆப் சுற்றுகள் நடக்க உள்ளன.
Story first published: Friday, October 20, 2017, 18:38 [IST]
Other articles published on Oct 20, 2017


Click it and Unblock the Notifications