“பறக்கும் பியானோ.. பறக்கும் டிரம்ஸ்”.. தூள் கிளப்பிய செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. ரசிகர்கள் குஷி!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகள் பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தது.
கடந்த 12 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் நிறைவு விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

நிறைவு விழா நிகழ்ச்சிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்க, தொடக்க விழாவில் நடைபெற்றது போன்றே பிரமாண்டமாக நிறைவு விழா நடத்தப்பட்டது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கண் கவர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இசை நிகழ்ச்சிகள்
இதன்பின்னர் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, ராஜேஷ் வைத்தியாவின் வீணை இசை, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசை கலைஞர் நவீன் ஆகியோர் ஒன்றிணைந்து இசைக்கச்சேரி நடத்தினர். இதில் குறிப்பாக அயல்நாட்டு இசைக்கலைஞர் ஒருவர் பியானோ இசைத்த விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

பறக்கும் டிரம்ஸ்
பறக்கும் பியானோவில் அவரும் இசைத்துக்கொண்டே பறந்தார். அதில், பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" பாடல் உள்ளிட்ட பிரபலமான பாடல்கள் இசைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி படையப்பா திரைப்படத்தில் வரும் இசையை பறந்துக்கொண்டே டிரம்ஸ் கலைஞர்கள் வாசித்தனர்.

பாரம்பரிய விளையாட்டுக்கள்
இதன்பின்னதாக தமிழகர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களும், அவர்களின் திறமைகள் குறித்தும் நடனம் மூலமாக அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. இதில் ஜல்லிக்கட்டு, கண்ணாமூச்சி, கபடி, பந்தாட்டம், செஸ் உள்ளிட்ட விளையாட்டுக்கள் குறித்தும், அதில் தமிழர்கள் எவ்வளவு சிறந்து விளங்கினர் என்பது குறித்தும்காண்பிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications