ஆசிய விளையாட்டு : இன்று 5ஆம் நாள்… இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன?
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று ஐந்தாம் நாளை எட்டியுள்ளது. இந்தியா இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் வென்று பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்திய வீரர்கள் இன்றும் பல போட்டிகளில் விளையாட உள்ளதால், மேலும் பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது.
இன்று முக்கியமாக பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் பாட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க உள்ளனர். அவர்கள் பங்கேற்ற அணிப் பிரிவில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஒற்றையர் பிரிவில் அவர்கள் இருவரும் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் நாள் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் அட்டவணையை கீழே காணலாம்.

வில்வித்தை
- காலை 9.40 - ரீகர்வ் ஆண்கள் தனிப் பிரிவு - காலிறுதிக்கு முந்தைய சுற்று - விஸ்வாஷ், அதனு தாஸ்
- காலை 9.40 - ரீகர்வ் பெண்கள் தனிப் பிரிவு - காலிறுதிக்கு முந்தைய சுற்று - ப்ரோமிலா டைமரி, தீபிகா குமாரி
ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்
- மதியம் 3.00 - பெண்கள் வால்ட் இறுதிச் சுற்று - அருணா ரெட்டி, ப்ரனிதி நாயக்
பாட்மிண்டன்
- காலை 10.30 - பெண்கள் ஒற்றையர் - 16 நபர்கள் சுற்று - பி.வி.சிந்து, சாய்னா நேவால்
- காலை 10.30 - பெண்கள் இரட்டையர் - 32 நபர்கள் சுற்று - அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி - இணை மற்றும் ருதபர்ணா பண்டா, ஆரத்தி சாரா - இணை
- காலை 10.30 - கலப்பு இரட்டையர் - 32 நபர்கள் சுற்று - பிரணவ் சோப்ரா, சிக்கி ரெட்டி - இணை மற்றும் சத்விக் ராங்கிரெட்டி, அஸ்வினி பொன்னப்பா - இணை
- காலை 10.30 - ஆண்கள் இரட்டையர் - 32 நபர்கள் சுற்று - சத்விக் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி - இணை மற்றும் மானு ஆத்றி, சுமீத் ரெட்டி - இணை
- பாட்மிண்டன் போட்டிகள் காலை 10.30 மணிக்கு தொடங்கும். ஒவ்வொரு பிரிவு, சுற்று போட்டிகளின் நேரத்திற்கு ஏற்ப அட்டவணை மாறும்.
கூடைப்பந்து
- மாலை 5.00 - பெண்கள் அணி - இந்தியா x இந்தோனேசியா
பௌலிங்
- காலை 7.30 - ஆண்கள் ட்ரயோஸ் பிரிவு
பிரிட்ஜ்
- காலை 8.30 - ஆண்கள் அணி தகுதிச் சுற்று
- காலை 8.30 - கலப்பு அணி தகுதிச் சுற்று
- காலை 8.30 - சிறப்பு கலப்பு அணி தகுதிச் சுற்று
கேனோ / காயக் ஸ்லாலோம்
- காலை 8.00 - கேனோ பெண்கள் ஒற்றையர் அரையிறுதி - சம்பா மௌரியா
கோல்ப்
- காலை 4.30 - ஆண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் குழுப் பிரிவு
- காலை 4.30 - பெண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் குழுப் பிரிவு
பென்சாக் சிலாட்
- காலை 7.30 - ஆண்கள் 50-55 கிலோ - போய்னா சிங்
ரோயிங்
- காலை 7.30 - ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் இறுதி - தத்து போகன்லால்
- காலை 7.50 - ஆண்கள் இரட்டையர் ஸ்கல்ஸ் இறுதி - ஓம் பிரகாஷ், சவர்ன் சிங்
- காலை 8.00 - பெண்கள் இணை இறுதி - சஞ்சுக்தா தங், ஹர்ப்ரீத் கவுர்
- காலை 8.55 - பெண்கள் இரட்டையர் ஸ்கல்ஸ் இறுதி - சாயாலி, பூஜா
- காலை 9.10 - ஆண்கள் இணை இறுதி - மல்கீத் சிங், குரிந்தர் சிங்
- காலை 9.40 - ஆண்கள் லைட்வெயிட் நால்வர் பிரிவு இறுதிச் சுற்று
துப்பாக்கி சுடுதல்
- காலை 9.00 - ஆண்கள் ட்ராப் இரட்டையர் - ஷர்துல் விஹான், அங்குர் மிட்டல்
- காலை 9.00 - ஆண்கள் ட்ராப் இரட்டையர் இறுதி - வர்ஷா வர்மான், ஸ்ரேயாசி சிங்
ஸ்போர்ட் கிளைம்பிங்
- காலை 7.30 - ஆண்கள் வேகப் பிரிவு மற்றும் ஆண்கள் இணைந்த அணி காலிறுதிப் போட்டி
- காலை 7.30 - பெண்கள் வேகப் பிரிவு காலிறுதிப் போட்டி
ஸ்குவாஷ்
- காலை 8.30 - ஆண்கள் ஒற்றையர் - 32 நபர்கள் சுற்று - சௌரவ் கோஷால், ஹரிந்தர் பால்
நீச்சல்
- காலை 7.30 - ஆண்கள் 50 மீட்டர் பட்டர்பிளை ஹீட் - அன்ஷுல் கோதாரி, விர்தவால் காதே
- காலை 7.55 - ஆண்கள் 100 மீட்டர் பட்டர்பிளை ஹீட் - ஆரோன், விர்தவால் காதே
- காலை 7.38 - ஆண்கள் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் - ஸ்ரீஹரி நடராஜ், அத்வைத் பேஜ்
டென்னிஸ்
- காலை 8.30 - ஆண்கள் ஒற்றையர் காலிறுதி - பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன்
- காலை 8.30 - ஆண்கள் இரட்டையர் அரையிறுதி - ரோஹன் போபண்ணா, திவிஜ் ஷரன் இணை
- காலை 8.30 - பெண்கள் ஒற்றையர் அரையிறுதி - அங்கிதா ரெய்னா
- கலப்பு இரட்டையர் - அங்கிதா ரெய்னா, ரோஹன் போபண்ணா இணை (முந்தைய போட்டிகள் முடிந்து, ஓய்வுக்கு பின்)
வாலிபால்
- காலை 8.30 - பெண்கள் அணி - இந்தியா x கஜகஸ்தான்
பளுதூக்குதல்
- காலை 9.30 - ஆண்கள் 77 கிலோ - சதீஷ் சிவலிங்கம், அஜய் சிங்


Click it and Unblock the Notifications