Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது லிஸ்ட்லையே இல்லையே.. செஸ் ஒலிம்பியாட்டில் திடீரென கால்பந்து போட்டி.. கலக்கும் செஸ் வீரர்கள்!

சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் கலக்கி வரும் வீரர்கள் கால்பந்து போட்டியிலும் அசத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த ஜூலை 29ம் தேதி முதல் சென்னையில் கோலாகலமாக தொடங்கியது.

கடந்த 6 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணியை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தொடர் வெற்றிகளை பெற்று கலக்கி வருகின்றனர்.

 செஸ் ஒலிம்பியாட் போட்டி

செஸ் ஒலிம்பியாட் போட்டி

முதல் 2 நாட்களாக வெற்றிகளை குவித்த இந்திய அணியினர், அடுத்தடுத்த சுற்றுகளில் சில தோல்விகளை சந்தித்தனர். எனினும் தற்போது வரை அதிக வெற்றிகளை பெற்ற அணியாக செஸ் ஒலிம்பியாட் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது. குறிப்பாக இந்திய வீரர் குகேஷ் தொடர்ச்சியாக 6 சுற்றுகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

 ஒரு நாள் ஓய்வு

ஒரு நாள் ஓய்வு

விறுவிறுப்பாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் இன்றைய தினம் எந்தவித போட்டிகளும் கிடையாது. வீரர், வீராங்கனைகளுக்கு ஓய்வு தரும் வகையில் இன்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இன்றைய தினம் செஸ் வீரர்களின் புத்துணர்ச்சிக்காக கால்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கால்பந்து போட்டி

கால்பந்து போட்டி

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) மற்றும் ஐஎஸ்எல் தொடரின் சென்னையின் எஃப்சி அணியும் கால்பந்து தொடரை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த தொடரில் FIDE சார்பாக ஒரு அணி, இந்திய செஸ் கூட்டமைப்பின் அணி, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா என மொத்தமாக 6 அணிகள் கொண்ட போட்டி இன்று நடைபெறுகிறது.

சுவாரஸ்ய விஷயம்

சுவாரஸ்ய விஷயம்

இந்த போட்டிகளை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்க, போட்டிகள் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணி வீரர்களும், கால்பந்திலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Story first published: Thursday, August 4, 2022, 16:44 [IST]
Other articles published on Aug 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+