Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2018இல் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்கள்.. கோலி, தோனிக்கு சவால் விடும் சச்சின்

டெல்லி : 2018ஆம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த 21 இந்திய விளையாட்டு வீரர்கள் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

எப்போதும் போல இந்த முறையும் கிரிக்கெட் தான் இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.

கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார். அதிலும் கோலியின் வருமானம் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

ஆச்சரியம் அளிக்கும் பாட்மிண்டன்

ஆச்சரியம் அளிக்கும் பாட்மிண்டன்

முதல் பத்து இடங்களில் எட்டு இடங்களை கிரிக்கெட் வீரர்கள் பிடித்து அசத்தியுள்ளனர். நான்காவது மற்றும் பத்தாவது இடத்தை பாட்மிண்டன் வீராங்கனைகள் சிந்து (36 கோடி) மற்றும் சாய்னா நேவால் (16.5 கோடி) பிடித்து ஆச்சரியம் அளித்துள்ளனர். இந்த பட்டியலில் இவர்கள் இருவர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டாப்பில் கோலி

டாப்பில் கோலி

கோலி 228 கோடி வருமானத்துடன் முதல் இடத்தில் இருக்கிறார். சென்ற ஆண்டு 100 கோடி இருந்த அவரது வருமானம் விளம்பர வாய்ப்புகளால் அதிரடியாக இரு மடங்கு பெருகியுள்ளது. தோனி கிரிக்கெட் ஆட்டத்தில் முன்பை போல ஆடாவிட்டாலும், வருமானத்தில் எந்த குறையுமில்லாமல் இரண்டாம் இடத்தில் 101 கோடியுடன் இருக்கிறார். இந்திய அளவில் கோலி இரண்டாம் இடமும், தோனி ஐந்தாம் இடமும் பிடித்துள்ளனர்.

ஓய்வுக்கு பின்னும் சச்சின் கலக்கல்

ஓய்வுக்கு பின்னும் சச்சின் கலக்கல்

ஓய்வு பெற்று ஐந்து வருடம் ஆகியும் இன்னும் வருமானத்தில் கோலி, தோனிக்கு போட்டி கொடுத்து வருகிறார் சச்சின். இவர் 80 கோடியுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். ரோஹித் சர்மா 31 கோடியுடன் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்.

பண்டியாவின் வளர்ச்சி

பண்டியாவின் வளர்ச்சி

கடந்த ஆண்டு 3 கோடி வருமானத்துடன் இருந்த ஹர்திக் பண்டியா இந்த ஆண்டு 28 கோடி சம்பாதித்துள்ளார். பட்டியலில் ஆறாம் இடம் பிடித்துள்ளார் பண்டியா. அஸ்வின் 18 கோடியுடன் ஏழாம் இடம் பிடித்துள்ளார்.

கிரிக்கெட், பாட்மிண்டன் தவிர

கிரிக்கெட், பாட்மிண்டன் தவிர

கிரிக்கெட், பாட்மிண்டன் தவிர்த்து குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சர்மா (6.4 கோடி), கோல்ஃப் வீரர்கள் அனிர்பன் லாஹிரி (11.99 கோடி) மற்றும் சுபாங்கர் சர்மா (4.5 கோடி), டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா (3.27 கோடி) இந்த பட்டியலில் உள்ளனர்.

Story first published: Wednesday, December 5, 2018, 16:59 [IST]
Other articles published on Dec 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+