Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Formula 4 கார் பந்தயம்.. வா.. மா. மின்னல்! கண் இமைப்பதற்குள் கடந்த கார்கள்.. வெற்றி பெற்றது யார்?

ஃபார்முலா போர் கார் பந்தய தொடர் சென்னையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. தெற்காசியாவில் நடைபெறும் முதல் இரவு கார் ரேஸ் பந்தயம் என்ற பெருமையுடன் நடந்த இந்த போட்டியில் ஏராளமான பொதுமக்களும் திரைப்பட நட்சத்திரங்களும் கலந்து கொண்டு பந்தயத்தை ரசித்தனர்.

ஃபார்முலா கார் பந்தயத்தை நேரில் பார்க்க ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து டிக்கெட் விலை ரசிகர்கள் பெற்றனர். ஆனால் இந்த கார்கள் மணிக்கு சுமார் 200 முதல் 240 கிலோ மீட்டர் வேகத்தில் சீறி பாயும். இதனால் காரின் அழகை பார்க்கவே முடியாத அளவுக்கு வா மா மின்னல் என்பது போல் கார் பார்வையாளர்களை கடந்து சென்றது.

Formula 4 car result

சென்னையில் இப்படி ஒரு சர்வதேச போட்டியை நடத்த முடியுமா என எதிர்பார்த்த அனைவருக்கும் இந்த போட்டிகள் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் போக்குவரத்துக்கு எந்த தடையும் இன்றி வாகனங்கள் பாதி சாலையில் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த போட்டியை நடிகை திரிஷா, நடிகர் நாக சைதன்யா, கிரிக்கெட் வீரர் கங்குலி உள்ளிட்ட பிரபலங்கள் கண்டு ரசித்தனர்.

சென்னை தீவு திடலில் தொடங்கி போர் நினைவுச் சின்னம் ,நேப்பியர் பாலம்,சுவாமி சிவானந்தா சாலை உள்ளிட்ட வழியை கடந்து மீண்டும் தீவுத்திடலுக்கு வந்து அடையும் வகையில் ஒரு லேப் 3.8 கிலோ மீட்டர் தூரம் அளவுக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் 19 திருப்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதலில் நடைபெற்ற ஃபார்முலா போர் கார் பந்தய (இந்திய ரேஸிங் லீக்) போட்டியில் கார்கள் சுமார் 6 லேப் வரை சுற்றி வந்தது. 1.3 லிட்டர் ஷிப்ட் இன்ஜின் பயன்படுத்தப்பட்ட காரில் வீரர்கள் சீறிப்பாய்ந்தனர்.

இதில் பந்தய தூரமான சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தை 13 நிமிடம் 52.13 வினாடிகளில் கடந்து டார்க் டான் நிறுவனத்தைச் சேர்ந்த டி எஸ் திலிட் வெற்றி பெற்றார். இந்தப் பந்தயத்தை முதல் இடத்தில் இருந்து தொடங்கிய மொமெண்டம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் மேக் பர்சன் 0.44 வினாடிகள் வித்தியாசத்தில் பின்தங்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.

மூன்றாவது இடத்தை மீண்டும் கார்டன் ரேசிங் நிறுவனத்தை சேர்ந்த திலிஜ் ராவ் பிடித்தார். இதனை அடுத்து இந்தியன் எஃப்4 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இது 10 லேப் சுற்றாக அமைந்தது. அதாவது 30 கிலோமீட்டர் பந்தய தூரத்தை ஆஸ்திரேலிய வீரரும் காட் ஸ்பீட் கொச்சின் நிறுவனத்தின் வீரருமான ஹீட்ஸ் பார்டர் 19 நிமிடம் 42.95 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.

பெங்கால் டைகர்ஸ் சேர்ந்த ஆல்வா முதலிடம் பிடித்தவரை விட 7.29 வினாடிகள் பின்தங்கி இரண்டாவது இடத்தையும், பெங்களூர் ஸ்பீட்ஸ்டர் நிறுவனத்தை சேர்ந்த அபே மோகன் முதல் இடம் பிடித்தவரை விட 26 வினாடிகள் பின்தங்கி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

Story first published: Monday, September 2, 2024, 1:01 [IST]
Other articles published on Sep 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+