Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Formula 4 கார் பந்தயம் - சென்னையில் நேரில் எப்படி பார்ப்பது? டிக்கெட் விலை? எந்த சேனலில் பார்க்கலாம்

சென்னை : ஃபார்முலா 4 கார் பந்தயம் முதல் முறையாக தெற்காசிய அளவில் பகல் இரவு பந்தயமாக சென்னையில் நடைபெறுகிறது. சென்னை வீதிகளில் ஃபார்முலா போர் கார் பந்தயம் நடப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் எவ்வளவு? டிக்கெட் வாங்கிய பிறகு எங்கு சென்றால் இந்த போட்டியை பார்க்க முடியும்.

தொலைக்காட்சியில் எந்த சேனல் மற்றும் ஓடிடியில் இந்த கார் பந்தயங்களை பார்க்கலாம் என்பது குறித்து விரிவான தகவல் உங்களுக்காக. இந்த கார் பந்தயத்திற்கான டிக்கெட்டின் ஆரம்ப விலை ஆயிரம் ரூபாய் ஆகும். அதன் பிறகு அடுத்த விலை 2000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

formula 4 chennai race 4 ticket bookings


இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் பேடிஎம் இன்சைடர் ஆப் மற்றும் வெப்சைட்டில் பெற்றுக் கொள்ளலாம். ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறும் போட்டிகளை பார்க்க தனி டிக்கெட்டும், செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் போட்டிகளைப் பார்க்க தனி டிக்கெட்டுகளும் வாங்க வேண்டும். இல்லை எனக்கு இரண்டு நாளும் சேர்த்து பார்க்க வேண்டுமென்றால் அதற்கு பேடிஎம் இன்சைடர் ஆப்பில் ஆன்லைனில் தனி பாஸ் வாங்க வேண்டும் .

அதன் ஆரம்ப விலை ரூ.2125 ரூ.2499,ரூ.11899,ரூ.16,999 ஆகிய விலை கொடுத்து டிக்கெட் விலை பெற்றுக்கொள்ளலாம். ஆகஸ்ட் 31ஆம் தேதி மதியம் 2.30 மணியிலிருந்து 5 மணி வரை பயிற்சி சுற்றுகள் நடைபெறும். அதன் பிறகு பொழுதுபோக்கு சாகச கார்பந்தய நிகழ்ச்சி நடைபெறும். இதனை தொடர்ந்து தகுதிச் சுற்றுகள் இரவு 9 மணி வரை நடைபெறும்.

இதை தொடர்ந்து செப்டம்பர் ஒன்றாம் தேதி கார் பந்தயங்கள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். இது இரண்டு முப்பது மணியிலிருந்து இரவு பத்து மணி வரை நடைபெறும். இடையில் பொழுதுபோக்கு கார் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. சரி டிக்கெட்டுகளை நீங்கள் பெற்று விட்டால், எங்கு வந்து போட்டியை பார்க்க வேண்டும் என்று கேள்வி உங்கள் மனதில் எழலாம்.

அதற்கான பதில் இதோ. உங்களுக்கான டிக்கெட் கிராண்ட் ஸ்டாண்ட் 1 என்ற இடத்தில் இருந்தால், நீங்கள் முத்துசாமி மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள கேட் 2க்கு சென்று கிராண்ட் ஸ்டாண்ட் ஒன் பார்வையாளர் மாடத்தில் அமரலாம்.
இதே போன்று கிராண்ட் ஸ்டாண்ட் இரண்டு, மூன்று,நான்கு, ஐந்து ஆகிய மாடங்களில் அமர வேண்டுமென்றால் நீங்கள் கலைவாணர் அரங்கம் அருகே வர வேண்டும்.

உங்களுக்கான கார் பார்க்கிங் வசதிகள் கலைவாணர் அரங்கம், மற்றும் எம் எம் சி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று கோல்ட், பிளாட்டினம் மற்றும் பிரீமியம் ஸ்பான்சர் போன்ற டிக்கெட் வாங்கி இருந்தால் நீங்கள் சென்னை பல்கலைக்கழகம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஆறாவது கேட்டுக்கு வர வேண்டும். அங்கு சென்னை பல்கலைக்கழகம் உள்ளே மற்றும் மெரினா கடற்கரை ஓரம் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

இங்கு வெளி உணவுகளுக்கு அனுமதி கிடையாது. பெண்கள் தங்கள் ஹேண்ட் பேக்குகளை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. மேலும் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை கண்டிப்பாக அழைத்து வரக்கூடாது. சரி நேரில் சென்று பார்க்கும் அளவுக்கு எல்லாம் பணமும் இல்லை, நேரமும் இல்லை என்று நினைத்தால், நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கலாம். இதற்காக நீங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2 (star sports select 2) என்ற சேனலை சப்ஸ்கிரைப் செய்திருக்க வேண்டும். ஆன்லைனில் பார்க்க வேண்டுமென்றால் பேன் கோட் (Fancode) ஆப்பை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

Story first published: Thursday, August 29, 2024, 13:57 [IST]
Other articles published on Aug 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+