Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Formula 4 - முதல் நாள் (ஆகஸ்ட் 31) போட்டிகள் என்னென்ன? எத்தனை மணிக்கு பார்க்கலாம்?

சென்னை: தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இந்தியன் ரேஸிங் லீக் மற்றும் ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31 அன்று முதல் நாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இது தெற்கு ஆசியா மற்றும் இந்தியாவின் முதல் இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயம் ஆகும். சென்னை தீவு திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றை உள்ளடக்கிய 3.5 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட சாலையில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

formula 4 chennai

இந்த பந்தயம் நடைபெறும் சாலைகளில் எஃப்ஐஏ என்ற சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஆகஸ்ட் 31 அன்று காலை 11 மணி அளவில் முழு அளவிலான ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். அவர்கள் ஒரு மணி நேரம் ஆய்வு செய்து தரச் சான்றிதழ் மற்றும் அனுமதி அளித்தால் மட்டுமே இந்த பந்தயத்தை நடத்த முடியும்.

இந்த பந்தயத்தின் முதல் நாளன்று என்னென்ன போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன என்பதை பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு பந்தயங்கள் நடைபெற உள்ளன. ஃபார்முலா 4, ஃபார்முலா எல்ஜிபி 4 மற்றும் இந்திய ரேஸிங் லீக் ஆகிய மூன்று பந்தயங்களும் அடுத்தடுத்து நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டு இருக்கிறது. முதல் நாள் அன்று சோதனை, பயிற்சி மற்றும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

அதன் பின்பு மதியம் 12 மணி முதல் 12.30 வரை 30 நிமிடங்களுக்கு பந்தயம் நடைபெற உள்ள சாலை எப்படி இருக்கிறது என்பதை ஓட்டுநர்கள் சோதித்துப் பார்க்க நேரம் ஒதுக்கப்படும். அதன் பின் மதியம் 2.30 மணிக்கு ஃபார்முலா எல்ஜிபி 4 பிரிவுக்கான முதல் பயிற்சி சுற்று நடைபெறும்.

மதியம் 3.10 மணிக்கு ஃபார்முலா 4 பிரிவு முதல் பயிற்சி சுற்று நடைபெறும். மதியம் 3.50 மணிக்கு இந்தியன் ரேஸிங் லீக் டிரைவர் ஏ பிரிவு பயிற்சி சுற்று நடைபெறும். மாலை 4.30 மணிக்கு ஃபார்முலா எல்ஜிபி 4 இரண்டாவது பயிற்சி சுற்று நடைபெறும். மாலை 5.10 மணிக்கு ஃபார்முலா 4 இரண்டாவது பயிற்சி சுற்று நடைபெறும்.

மாலை 5.50 மணிக்கு சாகச நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மாலை 6.30 மணிக்கு இந்தியன் ரேஸிங் லீக் டிரைவர் பி பிரிவு பயிற்சி சுற்று நடைபெறும். இரவு 7.10 மணிக்கு ஃபார்முலா 4 முதல் தகுதிச் சுற்று நடைபெறும். இரவு 7.25 மணிக்கு ஃபார்முலா 4 இரண்டாவது தகுதிச் சுற்று நடைபெறும்,

இரவு 7.45 மணிக்கு ஃபார்முலா எல்ஜிபி 4 தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெறும். இரவு 8.30 மணிக்கு இந்தியன் ரேஸிங் லீக் டிரைவர் பி பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெறும். இரவு 9 மணிக்கு ஃபார்முலா 4 பந்தய சாலை மூடப்படும்.

Story first published: Saturday, August 31, 2024, 11:23 [IST]
Other articles published on Aug 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+