For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீச்சல்: பெல்ப்ஸின் சாதனையே முறியடிப்பு.. உலக சாதனை படைத்த 22 வயது வீரர்!

ஃபுகுவோகா: உலக நீச்சல் போட்டியில் பிரான்ஸ் நாட்டின் 22 வயதேயான இளம் வீரர் லியோன் மர்சந்த், ஆஸ்திரேலியா ஜாம்பவானான பெல்ஸின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். சர்வதேச அளவில் முறியடிக்கப்படாமல் இருந்த பெல்ஸின் ஒரே சாதனை இதுவாகும்.

ஜப்பானில் ஃபுகுவோகாவில் உலக அக்வாடிக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர்களுக்கான தனிநபர் 400 மீட்டர் மெட்லே வகை நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாட்டின் இளம் வீரர் லியோன் மர்சந்த், 400 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்கள் 2.50 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.

French Star Swimmer Leon Marchand breaks the Michael Phelps World Record in 400 M Medley

இதன் மூலம் தங்கப் பதக்கத்தை வென்றதோடு, புதிய உலக சாதனையையும் லியோன் மர்சந்த் படைத்துள்ளார். முன்னதாக 2008ஆம் ஆண்டு சீனாவின்ம் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியா ஸ்விம்மிங் ஜாம்பவான் பெல்ப்ஸ், 400மீ தனிநபர் மெட்லே வகை நீச்சல் போட்டியில், பந்தய இலக்கை 4 நிமிடங்கள் 3.84 வினாடிகளில் கடந்திருந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை லியோன் மர்சந்த் முறியடித்துள்ளார்.

சர்வதேச அளவில் பெல்ப்ஸின் படைத்த சாதனைகளில் இது மட்டுமே முறியடிக்கப்படாமல் இருந்தது. இந்த சாதனையையும் தற்போது பிரான்ஸ் வீரர் லியோன் முறியடித்துள்ளார். அடுத்த பாரீஸ் நகரில் ஒலிம்பிக் தொடர் நடக்கவுள்ள நிலையில், அதற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், எனது சிறந்த செயல்பாடுகள் இனி தான் வரும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் இந்த சாதனை குறித்து லியோன் கூறுகையில், எனது முன்னேற்றத்தின் அடுத்த படி இதுவாகும். பெல்ப்ஸின் பெயருக்கு முன் என் பெயரும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். அதேபோல் 22 வயதாகும் இளம் வீரரான பிரான்ஸ் நாட்டின் லியோனுக்கு, பெல்ப்ஸின் ஆலோசகராக இருந்த போப் போவ்மேன் பயிற்சியாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 24, 2023, 10:53 [IST]
Other articles published on Jul 24, 2023
English summary
Sports: France star Swimmer Leon Marchand Breaks the world record of Michael Phelps last record which was done in 2008 Beijing Olympics.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+