அடேங்கப்பா.. 2 கால்களுக்கு இடையே சிக்கிய பந்து.. வித்தை காட்டும் சிங்கப் பொண்ணு!
பாரீஸ்: சிங்கப் பெண்களுக்குத்தான் நாட்டில் பஞ்சமே இல்லையே.. என்ன அவர்களை சரியான முறையில் கண்டுபிடித்து தூக்கி விட்டு தட்டிக் கொடுக்கத்தான் ஆட்கள் இல்லை. மற்றபடி அவர்கள் அசத்திக் கொண்டுதான் உள்ளனர்.
Recommended Video
ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதிக்க முடியும் என்பதை பெண்கள் எப்போதோ நிரூபித்து விட்டனர். அதை தற்போது ஆண்களும் கூட சரியாக புரிந்து கொண்டு விட்டனர். சிலர் மட்டுமே இன்னும் தடைக்கல்லாக இருக்கின்றனர்.
பல சினிமாக்கள் கூட பெண்களுக்கு உற்சாகமும், ஊக்கமும் கொடுக்கும் வகையில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பிகில் படத்தில் கூட பெண்களை உயர்த்தும் வகையில் கதையமைக்கப்பட்டிருக்கும். அதில் விஜய் செய்யும் கால்பந்து தந்திரங்கள் அனைவரையும் கவர்ந்தன.

வித்தை காட்டும் பெண்
ஆனால் விஜய்யைப் போலவே, ஏன் விஜய்யை விட சிறப்பாக கால்களால் நர்த்தனமாடும் ஒரு பெண் பாரீஸைக் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரது கால்களுக்குள் சிக்கிக் கொண்ட பந்து எப்படியெல்லாம் புகுந்து விளையாடி வித்தை காட்டுகிறது என்பதைப் பார்த்தால் நமக்கே ஆச்சரியமாகி விடும். தேர்ந்த கால்பந்து வீரர்களே கூட இதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

லிசா ஸிமோச்சே
இவர் பாரீஸைச் சேர்ந்த சிங்கப் பெண். அவரது பெயர் லிசா ஸிமோச்சே. கால்பந்தில் பெரும் ஆர்வம் கொண்டவர். அதை விட கால்பந்தை வைத்து வித்தை காட்டுவதில் ஜெகஜால கில்லாடி. இவரிடம் போட்டி போட்டு தோற்றவர்கள்தான் நிறைய இருக்கிறார்களாம். அந்த அளவுக்கு இரு கால்களுக்கு இடையே கால்பந்தை வைத்து இவர் செய்யும் வித்தைகள் அடேங்கப்பா ரகமாக உள்ளன.
வீடியோக்கள் பாப்புலர்
இவரது வீடியோ ஒன்று ரொம்பப் பாப்புலராக வலம் வந்து கொண்டுள்ளது. ஒரு மைதானத்தில் லிசாவும், இன்னும் சில வீரர்களும் கால்பந்துடன் உள்ளனர். லிசாவுக்கு கால்பந்தில் கற்றுக் கொள்ள ஆர்வம் இருப்பதாக கோச் சொல்கிறார். அந்த ஆண் வீரர்களும் சொல்லிக் கொடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் லிசா அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கிறார் தனது திறமையால்.. அந்த ஆண் வீரரர்கள், லிசா செய்யும் வித்தைகளைப் பார்த்து மிரண்டு போய் விடுகின்றனர்.
பழைய வீடியோதான்
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பழைய வீடியோதான் என்றாலும் இப்போதும் அதை யாராவது வைரலாக்கிக் கொண்டே உள்ளனராம். அதையும் லிசாவே சொல்லி சிரித்துள்ளார். இதுதவிர வேறு சில வீடியோக்களும் அவரது டிவிட்டரில் காணப்படுகிறது. விளையாட்டு உலகமே கொரோனாவைரஸால் ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது. இந்த நிலையில் இதுபோன்ற வீடியோக்களைப் பார்த்து மனசை தேத்திக்க வேண்டியதுதான். வாழ்த்துக்கள் லிசா.


Click it and Unblock the Notifications