For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்திரேலியாவில் தங்கம் குவிக்கும் இந்தியா

By Staff

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வரும் 18 வது காமன் வெல்த் போட்டிகளில் 12 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. துப்பாக்கி சுடுதலில் மட்டும் இதுவரை 8 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களை இந்தியா அள்ளியுள்ளது. நேற்று மட்டும் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 தங்கங்களை வென்றுள்ளது.

இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா 12 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலத்துடன் மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்து 17 தங்கம், 19 வெள்ளி, 15 வெண்கலங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா 39 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

25 மீட்டர் ஏர்-பிஸ்டல் பிரிவில் சரோஜா குமாரி, சுஷ்மா ராணி ஜோடியும், 10 மீட்டர் ஏர்-ரைபில் பெண்கள் பிரிவில் தேஜஸ்வனி சாவத், அவனீத் கவுர் சித் ஜோடியும் தங்க பதக்கங்களை வென்றது.

துப்பாக்கி சுடுதல் போட்டி ஆண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர்-ரைபிள் பிரிவில் அபினவ் பிந்திரா, சுகன் நரங்சிங் ஜோடியும், 25 மீட்டர் "ஸ்டாண்டார்டு பிஸ்டல் பிரிவில் சமரோஷ் சங், ரோணங் பண்டிட் ஜோடியும் தங்க பதக்கம் வென்றது.

ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் விஜயகுமார், பெம்மா தாமங் ஜோடியும், 50 மீட்டர் ரைபிள் பிரிவில் அபிவன் பிந்திரா, சுகன் நரங்சிங் ஜோடியும் தங்க பதக்கம் வென்றது. பெண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் பிரிவில் அறிமுக வீராங்கனையான தேஜஸ்வினி சவுந்த் தங்கம் வென்றார். 25 மீட்டர் சென்டர் பயர் பிஸ்டல் பிரிவில் சமரோஷ் ஜங், ஜஸ்பால் ராண ஜோடி தங்கம் வென்றது.

பெண்களுக்கான பழு தூக்கும் பிரிவில் யாம்னம் ரேணு பால சானு 183 கிலோ பழு தூக்கி தங்க பதக்கம் வென்றார் 48 கிலோ பிரிவில் குஞ்சா ராணி தங்க பதக்கம் வென்றார். டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த சரத்கமல், சுபாசித் சாகா, சவுமியா தீப் ராய், சிபாஜி தத்தா ஆகியோர் தங்க பதக்கம் வென்றனர்.

வெள்ளிகளை குவிந்த வீரர்கள்:

ஆண்களுக்கான பழு தூக்கும் போட்டியில் 56 கிலோ எடைப்பிரிவில் விக்கி பாட்டா 245 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். 77 கிலோ பிரிவில் முகமது ஜாகிர் அசத்துல்லா வெள்ளி வென்றார்.

பளு தூக்குதல் 69 கிலோ பிரிவில் மோனிகா தேவி, அருண் முருகேசன் வெள்ளி பதக்கம் வென்றனர்.

ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் சமரேஷ் ஜங், விவேக் சிங் ஜோடியும்,

துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் அஞ்சலி பகவத், அனு ஜங் ஜோடி 1142 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கம் வென்றது. துப்பாக்கி சுடுதல் டபள் ட்டிராப் இரட்டையர் பிரிவில் ரத்தோர் விக்ரம் பட்நாயக் ஜோடி வெள்ளி வென்றது. பெண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் பிரிவில் அவ்னீத் கவுர் வெள்ளி பதக்கம் வென்றார்.

வெண்கலம் வென்ற வீரர்கள்:

69 கிலோ பழு தூக்கும் பிரிவில் சுதிர்குமார் சித்ரதுர்கா வெண்கலம் வென்றார்.

பாட்மிட்டன் குழு பிரிவில் செய்னா நேவால், இரண்டடையர் பிரிவில் ஜாவ்லா கட்டா, டிஜூ ஜோடியும், ரூபேஸ்குமார், தாமஸ் ஜோடியும் வெண்கலத்தை கைப்பற்றியது.

இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா 12 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலத்துடன் மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்து 17 தங்கம், 19 வெள்ளி, 15 வெண்கலங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா 39 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலம் என முதலிடத்தில் உள்ளது.

[an error occurred while processing this directive]

Story first published: Wednesday, December 7, 2011, 17:50 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+