Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு பாதி தங்கப் பதக்கம் போச்சு.. 2026 காமன்வெல்த் போட்டிகளில் ஏற்பட்ட சிக்கல்

டெல்லி: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறவுள்ள 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டுகளின் எண்ணிக்கை வெறும் பத்தாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் பதக்க வாய்ப்புகள் பாதியாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது. ஆனால், இந்த முறை இந்தியாவுக்குப் அதிக பதக்கங்களை பெற்றுத் தரும் மல்யுத்தம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஹாக்கி, ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகள் போட்டிப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. கடந்த முறை இந்தியா வென்ற 61 பதக்கங்களில் 30 பதக்கங்கள் இந்த விளையாட்டுகளின் மூலமே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Glasgow 2026 Commonwealth Games India cannot win more medals after sports programmes reduced

தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை கடந்த முறை இந்தியா வென்ற 22 தங்கங்களில் 13 தங்கப் பதக்கங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ள விளையாட்டுகளிலிருந்து வந்தவை ஆகும். கடந்த முறை மல்யுத்தத்தில் 6 தங்கங்களும், டேபிள் டென்னிஸில் 4 தங்கங்களும், பேட்மிண்டனில் 3 தங்கங்களும் இந்தியாவுக்குக் கிடைத்தன. இந்த விளையாட்டுகள் 2026 காமன்வெல்த் போட்டிகளில் இல்லாதது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக மாறி உள்ளது. இதனால், இந்த முறை இந்தியா 124 பேர் கொண்ட சிறிய குழுவை மட்டுமே கிளாஸ்கோவுக்கு அனுப்புகிறது.

IND vs ENG: இதான் டா கேப்டன் இன்னிங்ஸ்.. தனி ஆளாக இந்திய அணியை கரை சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயர்

IND vs ENG: இதான் டா கேப்டன் இன்னிங்ஸ்.. தனி ஆளாக இந்திய அணியை கரை சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயர்

இனிவரும் காமன்வெல்த் போட்டிகளில் தடகளம், பளுதூக்குதல் மற்றும் குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுக்களையே இந்தியா பெரிதும் நம்பியுள்ளது. இது குறித்துப் பேசிய இந்திய காமன்வெல்த் விளையாட்டுக் குழுவின் தலைவர் ரோஹித் ராஜ்பால், "இந்தியாவின் பலமான விளையாட்டுகள் பெரும்பாலானவை இந்த முறை இல்லாததால், ரசிகர்கள் பதக்கப் பட்டியல் குறித்து யதார்த்தமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். வழக்கமாக குறைந்தது 20 விளையாட்டுகள் இருக்கும் இடத்தில் இந்த முறை 10 விளையாட்டுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன" என்று ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Story first published: Friday, July 10, 2026, 0:05 [IST]
Other articles published on Jul 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+