காமன்வெல்த்தில் தங்கம் வென்ற பாக். வீரர்.. ரூ.20 லட்சம் கொடுத்த பாபர் அசாம்.. இந்திய வீரர்கள் ஜீரோ
லண்டன்: காமன்வெல்த்தில் இந்தியா இதுவரை 9 தங்கம் உள்ளிட்ட 26 பதக்கங்களை வென்று 5வது இடத்தை வென்றுள்ளது.
Recommended Video
ஆனால், நமது அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்று 5 பதக்கங்களுடன் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாட்டிலும் கிரிக்கெட்டுக்கு தரும் முக்கியத்துவம் வேறு எந்த விளையாட்டுக்கும் கொடுப்பது இல்லை.

இதனால், இரு நாடுகளில் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஏதாவது நிதி தர வேண்டும் என்றால் கிரிக்கெட் வாரியம் தான் வழங்கும். அண்மையில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிசிசிஐ தான் ஒரு கோடி ரூபாய் கொடுத்தது.
இந்த நிலையில் 2022 காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தான் வீரர் தாசாட்கிர் பட் பளுதூக்கும் போட்டி 105 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். அவரை பாராட்டி ஊக்கம் அளிக்கும் வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம், 20 லட்சம் ரூபாயை தனது சொந்த பணத்திலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாபர் அசாமை இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஓப்பிட்டுள்ள ரசிகர்கள், நீங்கள் எவ்வளவு பணம் நம் நாட்டு வீரர்களுக்கு வழங்கி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications