பெங்காலுடன் மல்லுக்கட்டி டிரா செய்த குஜராத்!
அகமதாபாத்: புரோ கபடி, சீசன் 5 போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மல்லுக்கட்டி, கடைசியில் டிரா செய்தது குஜராத் அணி.
புரோ கபடி லீக் சீசன் 5 போட்டிகளில் அடுத்தகட்டமாக, மண்டலங்களுக்கு இடையேயான ஆட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆட்டத்தில், ஏ மண்டலத்தில் உள்ள குஜராத் பார்ச்சூன்ஜயன்ஸ்ட் அணியும், பி மண்டலத்தில் உள்ள பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின.

மண்டலங்களுக்கு இடையே குஜராத்தின் அகமதாபாத்தில் நடக்கும் கடைசி போட்டி இது என்பதால், உள்ளூர் அணி வெற்றி பெறும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடின. 7வது நிமிடத்தில், 4-3 என குஜராத் முன்னிலையில் இருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் சச்சின் அபாரமாக விளையாடினார். ஆட்டத்தின் முதல், 15 நிமிடங்களுக்குள் அவர் 5 புள்ளிகளை எடுத்தார். மொத்தமாக அவர் 8 புள்ளிகளை பெற்றார். பெங்கால் அணியின் தீபக் நர்வால், 9 புள்ளிகளை எடுத்தார்.
இந்தப் போட்டி சச்சினுக்கும் நர்வாலுக்கும் இடையேயான போட்டியாக மாறியது. இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர்.
முதல் பாதியின் கடைசி, 5 நிமிடங்கள் பெங்கால் அணியின் ஆதிக்கமே இருந்தது. முதல் பாதியின் இறுதியில் பெங்கால் 14-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டம் முடிவடைய 10 நிமிடங்கள் இருந்தபோது, 16-19 என குஜராத் நெருங்கி வந்தது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில், இரு அணிகளும் போட்டி போட்டு புள்ளிகளை எடுத்தன. கடைசி சில விநாடிகள் இருக்கும்போது, குஜராத் 26-25 என முன்னிலையில் இருந்தது. அப்போது பெங்காலின் நர்வால்,
ஒரு புள்ளியை எடுக்க, ஆட்டம் டையில் முடிந்தது.
Story first published: Sunday, August 20, 2017, 7:50 [IST]
Other articles published on Aug 20, 2017


Click it and Unblock the Notifications