Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பாவாகப் போகும் இளம் இந்திய வீரர்.. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டில் நடந்த திருமணம்.. செம ட்விஸ்ட்!

மும்பை: இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஹர்திக் பண்டியா விரைவில் தந்தையாக உள்ளார். மேலும், அவரது திருமணமும் எளிமையாக நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது.

நடாஷா ஸ்டான்கோவிக் என்ற செர்பியா நாட்டை சேர்ந்த நடிகையை அவர் காதலித்து, கடந்த ஜனவரியில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு இருந்தார்.

இந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பண்டியா தான் தந்தையாக உள்ளதை அறிவித்துள்ளார்.

திருமணமான புகைப்படம்

திருமணமான புகைப்படம்

மேலும், இன்ஸ்டாகிராமில் அவர் கர்ப்பம் தரித்துள்ள நடாஷா ஸ்டான்கோவிக்கின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், எளிய முறையில் திருமணம் நடந்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஆனால், திருமணம் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

ஆல் - ரவுண்டர் பண்டியா

ஆல் - ரவுண்டர் பண்டியா

இந்திய அணியில் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் இல்லாத குறையை போக்கியவர் ஹர்திக் பண்டியா. அவரது அதிரடி பேட்டிங் காரணமாக இந்திய அணியில் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் முக்கிய ஆல்-ரவுண்டராக இருக்கிறார்.

காயம் மற்றும் சிகிச்சை

காயம் மற்றும் சிகிச்சை

அவர் கடந்த ஆண்டு காயம் காரணமாக பல போட்டிகளில் பங்கேற்கவில்லை. அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் அதன் பின் நீண்ட காலம் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இடையே ஜனவரி மாதம் அவர் பாலிவுட்டில் சில பாடல்களுக்கு நடனம் ஆடிய மாடல் / நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்குடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

துபாய்க்கு இருவரும் சுற்றுலா சென்ற நிலையில், அங்கே யாரும் எதிர்பாராத நிலையில், படகில் வைத்து அவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் ஹர்திக் பண்டியா. அவரின் குடும்பத்தினர் கூட இதை எதிர்பார்க்கவில்லை. பின்னர் இருவரும் ஒன்றாக வலம் வந்தனர்.

மீண்டும் இந்திய அணியில்..

மீண்டும் இந்திய அணியில்..

பின் மார்ச் மாதம் நடைபெற இருந்த தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு திரும்பினார் ஹர்திக் பண்டியா. ஆனால், அந்தத் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. அடுத்து நடக்க இருந்த ஐபிஎல் தொடரும் நடைபெறவில்லை.

அறிவிப்பு

அறிவிப்பு

இந்த நிலையில் தான் ஹர்திக் பண்டியா தான் தந்தையாக உள்ள மகிழ்ச்சி செய்தியை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். எளிமையாக திருமணம் நடந்து விட்டதையும் புகைப்படம் மூலம் உணர்த்தி உள்ளார். அவருக்கு கிரிக்கெட் உலகில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் பலரும் ஹர்திக் பண்டியாவை வாழ்த்தி வருகின்றனர். இளம் வீரரான ஹர்திக் பண்டியா அதற்குள் திருமணம் மற்றும் தந்தையாக உள்ளதை அறிந்த ரசிகர்கள், "செம ஸ்பீடா வாழ்றீங்க ப்ரோ" என அவரை பார்த்து வாழ்த்தி / பொறாமைப்பட்டு வருகின்றனர்.

ஹர்திக் பண்டியா தந்தை

ஹர்திக் பண்டியா தந்தை

ஹர்திக் பண்டியாவின் தந்தை இது பற்றி அளித்த பேட்டியில், "நடாஷா நல்ல பெண். நாங்கள் அவரை மும்பையில் சில சந்தர்ப்பங்களில் சந்தித்து இருக்கிறோம். அவர்கள் துபாய்க்கு சுற்றுலா சென்றார்கள் என்று தெரியும். ஆனால், அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளப் போகிறார்கள் என எங்களுக்கு தெரியாது. அது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது." என்றார்.

Story first published: Monday, June 1, 2020, 10:32 [IST]
Other articles published on Jun 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+