Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாக்ஷிக்கு கவுரவம்: ஹரியானா ரூ.3 கோடி , மத்திய அரசு ரூ.30 லட்சம் பரிசு அறிவிப்பு

சட்டீஸ்கர்: ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றத் தந்துள்ள சாக்ஷி மாலிக்கிற்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.

சாக்‌ஷிக்கு அவர் சார்ந்துள்ள ஹரியானா மாநில அரசு ரூ.3 கோடி பரிசு அறிவித்து கவுரவப்படுத்தியுள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ரூ.30 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Haryana government announces Rs 3 crore for Sakshi Malik

சாக்‌ஷியின் சாதனையால் தேசமே பெருமை கொண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் பிரணாப் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதே போல பிரதமர் மோடியும் தனது டுவிட்டர் பதிவில் சாக்‌ஷியை இந்தியாவின் மகள் என வர்ணித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாக்ஷி மாலிக்கிற்கு 23 வயதாகிறது. ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் சாக்ஷியை வாழ்த்தியுள்ளார்.

சாக்ஷிக்கு விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

கடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் சுஷில் குமார், முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் வாழ்த்து கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்டோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதே போன்று சாக்ஷிக்கு பரிசுகளும் குவிந்து வருகின்றன.

சாக்ஷி பிறந்த மாநிலமான ஹரியானா மாநில அரசு உடனடியாக ரூ.3 கோடி பரிசு அறிவித்து சாக்ஷியை கவுரவப்படுத்தியுள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ரூ.30 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையும் ஒலிம்பிக்கில் வெண்கலம் வெல்பவர்களுக்கு ரூ. 50 லட்சம் பரிசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 18, 2016, 11:49 [IST]
Other articles published on Aug 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+