For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கதறி அழுத தங்கம் வென்ற ஸ்வப்னாவின் தாய்...கடவுள் சிலை முன் விழுந்து ஆனந்தக் கண்ணீர்

கொல்கத்தா : ஆசிய விளையாட்டில் நேற்று முன்தினம், இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் ஹெப்டாத்லான் விளையாட்டில் தங்கம் வென்றார். இந்தியா முதன்முறையாக இந்த விளையாட்டில் தங்கம் வெல்கிறது.

தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மன் ஏழ்மை பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை ரிக்க்ஷா ஓட்டுனர். தற்போது படுக்கையில் உடல்நலம் குன்றி இருக்கிறார். அவரது தாய் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

Heptathlon Gold winner Swapna Barman’s mother cried heavily in joy after her daughter won gold

இந்த பின்னணியில் இருந்து வந்த ஸ்வப்னா கடுமையான உழைப்பின் பயனாக ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார். அவர் தங்கம் வென்ற காட்சியை தொலைக்காட்சியில் கண்ட அவரது தாய் கதறி அழும் காட்சிகள் வெளியாகி இந்தியாவின் தாய் பாசம் எத்தகையது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஸ்வப்னா தங்கம் வென்றார் என்ற தகவலை தொலைகாட்சியில் கண்ட அவரது தாய் "ஓ" என அழுகிறார். தொடர்ந்து, தன் வீட்டில் சிறிதாக அமைக்கப்பட்ட காளி சிலை முன் விழுந்து கதறி அழுகிறார்.

ஸ்வப்னா பங்கேற்ற போட்டி தொடங்கியது முதல் அவர் அந்த காளி சிலை முன் அமர்ந்து வேண்டிக் கொண்டு இருந்தார் என கூறப்படுகிறது. அதன் பின்பு வென்ற செய்தி கேட்டு, அதைக் கண்டு தன் பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018

ஸ்வப்னாவுக்கு மேற்கு வங்காள முதல்வர் பத்து லட்ச ரூபாய் பரிசும், அரசு வேலையும் அறிவித்துள்ளது. ஸ்வப்னா இந்த போட்டியில் கடுமையான பல் வலியோடு பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 31, 2018, 11:10 [IST]
Other articles published on Aug 31, 2018
English summary
Heptathlon Gold winner Swapna Barman’s mother cried heavily in joy after her daughter won gold
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+