Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ்-கக்கு இடைநீக்கம்.. NADA அதிரடி

டெல்லி : பிரபல இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் 12 மாதங்களில் மூன்று முறை தான் இருப்பிடத்தை தெரிவிக்காததால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையால் (NADA) தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

அசாமைச் சேர்ந்த 23 வயதான அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய விளையாட்டு தொடரில் இடம் பெறவில்லை.

 Hima Das provisionally suspended by NADA

ஏற்கனவே, தேசிய பயிற்சி முகாமை விட்டு வெளியேறிய ஹிமா தாஸ், அதிகபட்சமாக இரண்டு வருட தடையை எதிர்கொள்ள வேண்டும், இது அவரது தவறின் அளவைப் பொறுத்து குறைந்தபட்சம் ஒரு வருடமாக குறைக்கப்படலாம்.

2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹிமா தாஸ் 400 மீட்டர் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்றிருந்தார். அவர் ஜகார்த்தாவில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற பெண்களுக்கான 4x400 மீ மற்றும் கலப்பு 4x400 மீ ரிலே குவார்டெட்களிலும் ஒரு பகுதியாக இருந்தார்.

உலக தடகள ஊக்கமருந்து எதிர்ப்பு (WADA) விதிகளின் கீழ், 12 மாத காலத்திற்குள் மூன்று முறை தன் இருப்பிடத்தை பற்றி தெரிவிக்காமல் இருப்பது அல்லது பரிசோதனைகளை செய்யாமல் தவறுவது ஆகியவை ஊக்கமருந்து எதிர்ப்பு விதி மீறலாகும்.

இதற்கு முன், டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் 2021 ஆசிய சாம்பியன்ஷிப் தொடர்களில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லாவுக்கு NADAவின் ஊக்கமருந்து எதிர்ப்பு ஒழுங்குமுறை குழு (ADDP) இதே காரணத்துக்காக ஓராண்டு தடை விதித்தது.

கடந்த ஜூலை மாதம், பல முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் தங்கம் வென்ற வினேஷ் போகட் மீது 12 மாதங்களில் முதல் முறையாக தன் இருப்பிடத்தை தெரிவிக்க தவறியதாக அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 6, 2023, 11:40 [IST]
Other articles published on Sep 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+