For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செஸ் ஒலிம்பியாட்டில் திடீர் தர்ணா.. ஹாங்காங் வீரர் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஹாங்காங் வீரர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி வருகிறது.

பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்துள்ள வீரர், வீராங்கனைகள் சென்னையில் சிறப்பாக போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக பாராட்டி வந்தனர்.

புது சர்ச்சை

புது சர்ச்சை

இந்நிலையில் நேற்று ஹாங்காங் வீரர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு ஹாங்காங் மற்றும் ஹைதி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஹைதி அணி வீரர் ஜூடி என்பவர் ஒரே காயை மூன்று முறை நகர்த்தினார். இதனையடுத்து ஹாங்காங் வீரர் லூக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தர்ணா போராட்டம்

தர்ணா போராட்டம்

இதனால் லூக் மகிழ்ச்சியில் இருந்த போது தான் திடீரென வெற்றி பறிக்கப்பட்டது. போட்டியில் யாரும் வெற்றி இல்லை என்றும், போட்டி சமனில் முடிவடைந்ததாகவும் நடுவர் அறிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த லூக் செஸ் ஒலிம்பியாட் வளாகத்தில் கீழே அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

லூக் விளக்கம்

லூக் விளக்கம்

இதுகுறித்து பேசிய அவர், போட்டியில் நடுவர் ஒருதலைபட்சமாக நடந்துக்கொண்டார். முதலில் என்னை வெற்றியாளர் என அறிவித்துவிட்டு, பின்னர் சமன் என கூறினால் எப்படி ஏற்றுக்கொள்வது. எனக்கு நீதி வேண்டும் என அதிருப்தியுடன் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

புள்ளிப்பட்டியல் விவரம்

புள்ளிப்பட்டியல் விவரம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. மொத்தமுள்ள 11 சுற்றுகளின் முடிவுகளையும் கணக்கிட்டு, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். தற்போது வரை இந்திய அணி 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, August 7, 2022, 12:47 [IST]
Other articles published on Aug 7, 2022
English summary
Hong kong player Protest in Chess olympiad ( செஸ் ஒலிம்பியாட் போட்டியில் போராட்டம் ) செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஹாங்காங் வீரர் திடீரென தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+