For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2K Kids னா சும்மா இல்ல.. கெத்து காட்டி வரும் பிரக்ஞானந்தா.. 90ஸ் கிட்ஸ்க்கு சரியான பதிலடி

சென்னை : சமூக வலைத்தளத்தை திறந்தாலே நாங்க எல்லாம் அந்த காலத்தில் எப்படி இருந்தோம் தெரியுமா என்று பூமர் ஆங்கிள் போல் 90's கிட்ஸ் பேசி வருவது தொடர் கதையாகி விட்டது.

மேலும் 2k கிட்ஸ் எப்போதும் எங்களுக்கு ஈடாக வர மாட்டார்கள். நாங்கள் வளர்ந்த விதம் வேறு, 2k கிட்ஸ் வளர்ந்த விதம் வேறு என்று பல கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் 90ஸ் கிட்ஸ் போடுவது உண்டு.

How Praggnanandhaa became icon of 2k kids and brokes the myth

மேலும் 90ஸ் கிட்ஸ் தான் கடவுளின் குழந்தைகள் போலவும் 2கே கிட்ஸ் எல்லாம் சாத்தானின் குழந்தைகள் போலவும் பலர் பேசி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லாம் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டி விட்டார் பிரக்ஞானந்தா. பிரக்ஞானந்தா ஒரு 2k கிட்ஸ் ஆவார். 2K கிட்ஸ் எல்லாம் பாரம்பரியத்தை மதிப்பதில்லை என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில் நெற்றியில் பட்டை என தெய்வீக குழந்தையாகவே நடமாடி வருகிறார் இந்த 2K கிட் பிரக்ஞானந்தா.

செஸ் உலகில் 90ஸ் கிட்ஸ் ஆன கார்ல்சன் போன்ற பல வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பிரக்ஞானந்தா விளங்கி வருகிறார். 2K கிட்ஸ் மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை பலர் சொல்கிறார்களே அதற்கு எல்லாம் நேர்மாறாக இப்படி ஒரு குழந்தையா என்று ஆச்சரியப்படும் வகையில் பிரக்ஞானந்தா காட்சியளிக்கிறார்.

காலம் மாற மாற தலைமுறையும் மாறி வருகிறது. விளையாட்டு,டிவி, சொந்தம், நண்பர்கள் என 90ஸ் கிட்ஸ் வளர்ந்தாலும் 2K கிட்ஸ் நவீன உலகத்திற்கு ஏற்றார் போல் தங்களை மாற்றிக் கொண்டு வளர்ந்து வருகிறார்கள்.2K கிட்ஸ் போனில் கேம் மட்டும் விளையாடவில்லை. ஃபோனையும் நெட்டையும் வைத்து எப்படி பணமாக மாற்றலாம் என்ற என்ற நுணுக்கம் கூட தெரிந்திருக்கிறது.

உதாரணத்திற்கு டிடிஎஃப் வாசன் பைக் ஓட்டி எப்படி அதனை யூட்யூபில் போட்டு தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேசும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.இதனை எல்லாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத 90ஸ் கிட்ஸ் தங்களால் அப்படி வாழ முடியவில்லை என்ற ஏக்கத்திலேயே 2K கிட்சை கிண்டல் அடித்து வருகிறார்கள். 2K கிட்சிலும் சிலருக்கு குறை இருக்கத்தான் செய்கிறது. அவர்களுடைய சில போக்கு வித்தியாசமாக தான் இருக்கிறது. ஆனால் அதற்காக ஒட்டுமொத்த 2K கிட்சை குறை கூறுவது சரியா என்று 90ஸ் கிட்ஸ் யோசிக்க வேண்டும். 2கே கிட்ஸ் இன் Icon ஆக தற்போது செஸ் வீரர் பிரக்ஞானந்தா விளங்கி வருகிறார்.

Story first published: Friday, August 25, 2023, 18:59 [IST]
Other articles published on Aug 25, 2023
English summary
How Praggnanandhaa became icon of 2k kids and brokes the myth 2K Kids னா சும்மா இல்ல.. கெத்து காட்டி வரும் பிரக்ஞானந்தா.. 90ஸ் கிட்ஸ் இனி திட்றதை நிறுத்துங்க பா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+