Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழகம் "செஸ்" தலைநகரானது எப்படி? ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை கிராண்ட் மாஸ்டர்கள்.. முழு விவரம்

சென்னை: 2022ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் தொடர் வரும் 28ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

Recommended Video

Virat Kohli கொடுத்த அதிரடி பேட்டி! ரசிகர்கள் உற்சாகம் *Cricket

இந்தியாவில் அத்தனை நகரங்கள் இருந்தும் சென்னை எப்படி இதில் தேர்வானது என்று கேள்வி உங்களுக்கு எழுலாம்.

ஏன் என்றால், செஸ் உலகத்தில் தமிழ்நாடு எப்போதும் தனி இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை தான்.

சென்னையில் செஸ் போட்டி

சென்னையில் செஸ் போட்டி

சென்னை இது போன்ற செஸ் போட்டிகளை நடத்துவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2013ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் தான் நடந்தது. இதில் தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்தும், நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்செனும் கலந்து கொண்டனர். உலகமே திரும்பி பார்த்த இந்தப் போட்டியில் கார்ல்சென் வென்றார்.

சென்னைக்கு வந்த எப்படி

சென்னைக்கு வந்த எப்படி

தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச செஸ் போட்டி நடைபெறுகிறது. இது இன்னும் மிக பிரம்மாண்டமாக 83 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றன. சொல்லப்போனால், இது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருந்தது. பின்னர், உக்ரைன் போர் காரணமாக அங்கு நடத்தப்படமாமல் வெளியேற, கிடைத்த வாய்ப்பை இந்திய செஸ் சம்மேளனம், தமிழக அரசின் உதவியால் சிறப்பாக பயன்படுத்தி கொண்டது.

தமிழகம் முதலிடம்

தமிழகம் முதலிடம்

சமேயோஜன அறிவு இருந்தால் மட்டுமே செஸ் போட்டியில் கலக்கி, கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியை பெற முடியும். அப்படி இருக்க இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிகபட்சமாக 24 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். இதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 8 பேர் உள்ளனர். டெல்லியில் 6 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்.

மற்ற மாநிலங்கள்

மற்ற மாநிலங்கள்

ஆந்திராவில் 4 பேரும், தெலுங்கானாவில் 3 பேரும் உள்ளனர் கர்நாடகா மற்றும் கேரளாவில் தலா 3 பேர் கிராண்ட் மாஸ்டர்களாக உள்ளனர். ஓடிசாவில் 2 பேரும், குஜராத்தில் 2 பேரும், ராஜஸ்தானில் ஒருவரும், ஹரியானாவில் ஒருவரும் உள்ளனர். நாட்டின் பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவர் கூட கிராண்ட் மாஸ்டர் இல்லை.

Story first published: Sunday, July 24, 2022, 18:20 [IST]
Other articles published on Jul 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+