Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை வெள்ளம் என்னை சோகத்தில் ஆழ்த்தியது: ரபேல் நடால் வருத்தம்

டெல்லி: சென்னை வெள்ளம் என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என சர்வதேச டென்னிஸ் வீர்ர ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

5 அணிகள் இடையிலான சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இந்தியன் ஏசஸ் அணி சார்பாக விளையாடி வரும் பிரபல சர்வதேச டென்னிஸ் வீரர் ரபெல் நடால் பிரபல ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

I am very Sad about Chennai floods

ஐ.பி.டி.எல். போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டு நடந்த போட்டியில் என்னால் வரமுடியாதது குறித்து எனக்கு வருத்தம் இருந்தது. ஆனால், இந்த வருடம் வந்துவிட்டேன். இந்தியாவுக்கு வருவது எனக்கு பிடி்த்தமான ஒன்று. இங்கு அனந்தபூரில் எனக்கு சொந்தமாக பயிற்சி அகாடமி உள்ளது. அங்கிருந்து சில சிறுவர்கள் நாளை ஸ்டேடியத்திற்கு வர உள்ளனர். ரோஜர் பெடரருக்கு எதிராக விளையாடும் ஆட்டங்கள் எப்போதுமே ஸ்பெஷலாக இருக்கும்.

சென்னைக்கு இரண்டு முறை நான் இதுவரை வந்திருக்கிறேன். சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை பற்றி அறிந்ததும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. என்னை அது மிகவும் பாதித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று ரபேல் நடால் தெரிவித்தார்.

Story first published: Saturday, December 12, 2015, 22:26 [IST]
Other articles published on Dec 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+