Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை: இந்தியா ஃபைனலுக்கு வருவது சந்தேகமே- நடிகர் சுனில் ஷெட்டி

டெல்லி: உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தேர்வாவது சந்தேகமே என்று பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஐசிசி உலகக் கோப்பை போட்டிகள் பற்றி பேசியுள்ளார். அண்மையில் டெல்லி வந்த அவர் உலகக் கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி சரி இல்லை என்றார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ஏமாற்றம்

ஏமாற்றம்

அனுபவமிக்க வீரர்களான யுவராஜ் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்திய அணிக்காக பாடுபட்ட அவர்களுக்கு தற்போது உலகக் கோப்பை அணியில் இடம் இல்லை.

யுவராஜ்

யுவராஜ்

2011ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற உதவிய யுவராஜ் சிங் அணியில் சேர்க்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தேர்வாளர்களின் லாஜிக்கே புரியவில்லை.

அக்சார் பட்டேல்

அக்சார் பட்டேல்

அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது நல்லது தான். ஆனால் அவர்கள் எந்த அளவுக்கு விளையாடுவார்கள் என தெரியவில்லை. அக்சார் பட்டேல், புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு பயிற்சி தேவை. ஆனால் அதற்குள் அவர்களை உலகக் கோப்பை போட்டிக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

கோஹ்லி

கோஹ்லி

நம் அணியில் ஒரு சில பந்துவீச்சாளர்கள் தான் உள்ளனர். இந்நிலையில் நாம் எப்படி வெற்றி பெறப் போகிறோம். விராத் கோஹ்லி திறமையானவர். அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வரும் என்று எனக்கு தோன்றவில்லை. தென்னாப்பிரிக்கா தான் உலகக் கோப்பையை வெல்ல உள்ளது என்றார் சுனில்.

Story first published: Tuesday, February 17, 2015, 6:10 [IST]
Other articles published on Feb 17, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+