For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆனந்த் மீண்டு வருவார்...சாம்பியன் கார்ல்சன் நம்பிக்கை

சென்னை: புதிய உலக செஸ் சாம்பியனாக முடி சூட்டப்பட்டுள்ள நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், விஸ்வநாதன் மீண்டு வரக் கூடியவர்தான். அவர் ஒரு சாம்பியன். ஓய்வு முடிவுக்கெல்லாம் அவர் போக மாட்டார். அவர் மீண்டு வருவார் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக என்டிடிவிக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில்தான் ஆனந்த் குறித்து இப்படிக் கூறியுள்ளார் கார்ல்சன்.

ஆனந்த்துடன் மோதியபோது முதல் 3 போட்டிகள் வரை தான் பதட்டமாக இருந்ததாகவும், ஆனால் அதன் பின்னர் பயம் போய் விட்டதாகவும் கார்ல்சன் கூறினார்.

நாடே கொண்டாடும் என் வெற்றி

நாடே கொண்டாடும் என் வெற்றி

நான் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டதை எனது நாட்டு மக்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். பலர் எனது போட்டியை தொடர்ந்து பார்த்து வந்தனர். பெரும் எதிர்பார்ப்பும், ஆர்வமும் இருந்தது. இது தற்போது வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ளது.

என்னை வச்சு என்ன பண்ணப் போறாங்களோ

என்னை வச்சு என்ன பண்ணப் போறாங்களோ

என்னை அங்கு எப்படி வரவேற்பார்கள் என்று தெரியவில்லை. நான் ஊருக்குத் திரும்பும்போது என்ன மாதிரியான கொண்டாட்டங்கள் காத்திருக்கின்றன என்பதும் தெரியவில்லை. என்ன திட்டமிட்டுள்ளார்கள் என்பதை அறிய நானும் ஆவலாகவே உள்ளேன்.

சின்ன லெவல் கொண்டாட்டம்தான்

சின்ன லெவல் கொண்டாட்டம்தான்

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றதை நான் பெரிய அளவில் கொண்டாடவில்லை. எனது அணியினர், ஸ்பான்சர்களுடன் சின்னதாக ஒரு விருந்து சாப்பிட்டோம். அருமையாக இருந்தது அந்த விருந்து.

ஒரு தரப்பாக போய் விடுமோ என்று பயந்தேன்

ஒரு தரப்பாக போய் விடுமோ என்று பயந்தேன்

ஆனந்த்துடன் மோதலைத் தொடங்கியபோது அது ஒரு தரப்புப் போட்டியாக மாறி விடுமோ என்று பயந்தது உண்மைதான். காரணம் ஆரம்பம் எனக்குக் கடினமானதாக இருந்தது. முதல் 3 போட்டிகள் உண்மையிலேயே கடினமானவைதான். பதட்டமாக இருந்தேன். ஆனால் அதன் பின்னர் செட்டிலாகி விட்டேன்.

ஆனந்த்தால் மீண்டு வர முடியும்

ஆனந்த்தால் மீண்டு வர முடியும்

ஆனந்த்தின் செஸ் ஆதிக்கம் முடிந்து விட்டதாக பலரும் கூறுகிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. புதிய சகாப்தம் தொடங்கியிருப்பதாக கூறினாலும் சரி, பழைய சகாப்தம் முடிந்து விட்டதாக கூறினாலும் சரி, என்னைப் பொறுத்தவரை ஆனந்த்தால் மீண்டும் எழுந்து வர முடியும் என்றே கருதுகிறேன். அவருடைய திறமை உயரியது. இன்னும் அவர் நீர்த்துப் போகவில்லை என்றே கருதுகிறேன்.

சென்னை சூப்பர்ப்பா...

சென்னை சூப்பர்ப்பா...

சென்னை பிடித்து விட்டது. நல்ல விருந்தோம்பலைப் பார்க்கிறேன். சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இப்படி ஒரு தொடரை நான் இதுவரை பார்த்ததில்லை. அருமையான அனுபவம்.

ஹாலிவுட்டில்...

ஹாலிவுட்டில்...

அட, சான்ஸே இல்லைங்க என்று சிரித்தபடி கும்பிடாத குறையாக பேட்டியை முடித்தார் கார்ல்சன்.

Story first published: Tuesday, November 26, 2013, 12:57 [IST]
Other articles published on Nov 26, 2013
English summary
Newly-crowned world chess champion Magnus Carlsen tells NDTV that he was nervous against Viswanathan Anand but settled down after game No. 3.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+