For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

29வது வினாடியில் கோல் போட்டு அமெரிக்க வீரர் சாதனை

By Veera Kumar

ரியோடி ஜெனிரோ: நடப்பு உலக கோப்பையில் அதிவிரைவாக கோல் அடித்த பெருமையை அமெரிக்க கேப்டன் பெற்றுள்ளார்.

If you turned the tv on after 30 seconds you missed a U.S. goal

பிரேசிலில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று அமெரிக்கா- கானா அணிகள் மோதின. இப்போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றது. கானாவுக்கு எதிராக அமெரிக்க கேப்டன் கிளைன்ட் டெம்சே ஆட்டத்தின் முதல் 29 வினாடியில் கோல் அடித்தார். உலக கோப்பையில் இது 5வது துரித கோல் ஆகும். முன்னதாக துருக்கியின் ஹகான் சுகூர் 2002ம் ஆண்டு உலக கோப்பைபோட்டியில் தென்கொரிய அணிக்கு எதிராக 11வது வினாடியில் கோல் அடித்ததுதான் உலகின் வேகமாக கோலாகும்.

முதலிலேயே அமெரிக்கா கோல் போட்டாலும், சுதாரித்துக்கொண்ட கானா, 82வது நிமிடத்தில் ஒரு கோல்போட்டு சமன் செய்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அமெரிக்காவின் ஜான் ப்ரூக்ஸ் ஒரு கோல் போட்டு கானாவின் கனவை தகர்த்தார். முதல் மற்றும் கடைசி நிமிடங்கள்தான் கானாவுக்கு எதிராக மாறின என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு உலக கோப்பைகளிலும் கானாவிடம் தோல்வியடைந்திருந்த அமெரிக்கா அதற்கு இந்த போட்டியின் மூலம் பழி தீர்த்துக்கொண்டது.

Story first published: Tuesday, June 17, 2014, 18:07 [IST]
Other articles published on Jun 17, 2014
English summary
Captain Clint Dempsey scored only 32 seconds into the match to put the Americans to the lead, but Ghana steadied themselves and gradually took back the possession of the ball. In the 82th minutes, Jordan Ayew equalised for Ghana, but John Brooks broke Ghanaian hearts with his late goal and sealed the three points for the Americans.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+