ஒட்டுமொத்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்ற 27-வது பதக்கம்... 12-வது வெண்கலம்
ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.
1900-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்து வரும் இந்தியா இதுவரை 33 ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ளது. ரியோ ஒலிம்பிக்ஸை தவிர்த்து இந்திய அணிக்கு 26 பதக்கங்கள் கிடைத்திருந்தன.

முதல் பதக்கம்
தற்போது நடைபெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கும் மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் 58-கிலோ எடைபிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

வெண்கலம் வென்ற சாக்ஷி
கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதினார் சாக்ஷி. 8-5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

27 பதக்கங்கள்...
இதன் மூலம் இந்தியா ஒலிம்பிக்கில் பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. இதில் 9 தங்கப்பதக்கங்கள், 6 வெள்ளி பதக்கங்கள், 12 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

54-வது இடம்
ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் பெற்ற நாடுகளில் பட்டியலில் இந்திய அணி தற்போது 54-வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications