Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமல்ராஜ், மாரியப்பன், ஆரோக்கிய ராஜீவிற்கு அர்ஜூனா விருது... குடியரசுத் தலைவர் வழங்கினார்

டெல்லி: விளையாட்டு துறையினரை கவுரவிக்கும் விதமாக விளையாட்டு விருது வழங்கும் விழாவில், வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ஆகஸ்ட் 29ம் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா டெல்லி ராஷ்டிரபதி பவனில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் வீரர்களுக்கு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை பெருமைபடுத்தினார்.

Including 3 players from Tamilnadu sports personalities received award from president.

விருது பெற்றவர்கள், பதக்கம் மற்றும் ரூ.7.5 லட்சம் தொகையைப் பரிசாகப் பெற்றனர். அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் விருது பெற்றவர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்களின் முழு விவரம்:

2017-ம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

தேவேந்திரன்(பாரா தடகள வீரர்)

சர்தார் சிங் (ஹாக்கி)

2017-ம் ஆண்டுக்கான துரோணாச்சாரியார் விருது

மறைந்த டாக்டர் ஆர். காந்தி (தடகளம்),

ஜி.எஸ்.எஸ்.வி.பிரசாத் (பாட்மின்டன் - வாழ்நாள் சாதனை)

ப்ரிஜ் பூஷன் மோஹந்தி (குத்துச்சண்டை - வாழ்நாள் சாதனை)

பி.ஏ.ரபேல் (ஹாக்கி - வாழ்நாள் சாதனை)

சஞ்ஜோய் சக்ரவர்த்தி ( துப்பாக்கிச் சுடுதல் - வாழ்நாள் சாதனை)

ரோஷன் லால் (மல்யுத்தம் - வாழ்நாள் சாதனை)

2017-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது பெற்ற வீரர்கள்

வி.ஜே.சுரேகா (வில்வித்தை),

குஷ்பீர் கௌர் (தடகளம்),

ஆரோக்கிய ராஜீவ் ( தடகளம்),

பிரஷாச்தி சிங் ( கூடைப்பந்து),

லைஷ்ராம்தேபேந்திரோ சிங் (குத்துச்சண்டை),

புஜாரா (கிரிக்கெட்),

ஹர்மன்ப்ரீத் கௌர் (கிரிக்கெட்),

ஓய்னம்பெம்பெம் தேவி (கால்பந்து),

எஸ்.எஸ்.பி. சாரசியா (கோல்ப்),

எஸ்.வி.சுனில் (ஹாக்கி),

ஜஸ்வீர் சிங் (கபடி),

பி.என்.பிரகாஷ் ( துப்பாக்கிச் சுடுதல்),

ஏ. அமல்ராஜ் ( டேபிள் டென்னிஸ்),

சாகெத்மைனேனி (டென்னிஸ்),

சத்வார்ட்கதியன் (மல்யுத்தம்)

மாரியப்பன் ( பாரா தடகள வீரர்),

வருண் சிங் பாடி (பாரா தடகள வீரர்),

2017-ம் ஆண்டுக்கான தயான்சந்த் விருது

பூபேந்தர் சிங் (தடகளம்),

சையது ஷாகித் ஹகிம் (கால்பந்து),

சும்ராய் தேதே (ஹாக்கி)

Story first published: Tuesday, August 29, 2017, 19:01 [IST]
Other articles published on Aug 29, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+