For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக கோப்பை: இந்தியாவை வீழ்த்த தென் ஆப்பிரிக்க அணியுடன் கைகோர்த்துள்ள மூவர் கூட்டணி!

By Veera Kumar

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்துவதற்காக பல்வேறு வியூகங்களை உருவாக்கி வருகிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இதற்கு கேரி கிறிஸ்டன், மைக் ஹஸ்சி, ஆலன் டொனால்டு கொண்ட மூவர் கூட்டணியை உருவாக்கியுள்ளது.

இந்திய சுழல் பவுலர்களை எதிர்கொள்வது எப்படி, இந்திய பேட்ஸ்மேன்களை வேகப்பந்தால் அச்சுறுத்துவது எப்படி என்பது பற்றிய பல்வேறு பயிற்சிகளில் தென் ஆப்பிரிக்க அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வெற்றிகரமான பயிற்சியாளர்

வெற்றிகரமான பயிற்சியாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக பதவி வகித்தவர் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கேரி கிரிஸ்டன். இவரது பயிற்சி காலத்தில்தான் 2011ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வென்றது. டெல்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணிக்கும் அவரே பயிற்சியாளராகும். இவர் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் ஆலோசகராக பதவி வகிக்கிறார்.

சிஎஸ்கே அனுபவசாலி மைக் ஹஸ்சி

சிஎஸ்கே அனுபவசாலி மைக் ஹஸ்சி

இதேபோல ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மைக் ஹஸ்சியும், தென் ஆப்பிரிக்காவுக்கான ஆலோசனை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டிவரை மட்டுமே அவர் ஆலோசகராக இருப்பார். அதன்பிறகு விலகிவிடுவார் என்பதில் இருந்தே, இந்தியாவுக்கு எதிரான போட்டியை எதிர்கொள்ள ஹஸ்சியின் உதவியை எந்த அளவுக்கு தென் ஆப்பிரிக்கா நம்பியுள்ளது என்பது புரிகிறது.

மூவர் கூட்டணி

மூவர் கூட்டணி

கேரி கிறிஸ்டன், மைக் ஹஸ்சி மட்டுமின்றி, முன்னணி வேகப்பந்து ஜாம்பவானாக விளங்கிய தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்டும் தனது நாட்டு வீரர்களுக்கு ஆலோசனை டிப்சுகளை கொடுத்து வருகிறார். குறிப்பாக பந்து வீச்சாளர்களுக்கு அவர் அறிவுரைகள் வழங்கி தவறுகளை சீர்திருத்தி வருகிறார். கேரி கிறிஸ்டன் மற்றும் ஹஸ்சி ஆகியோர் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் 26,845 ரன்கள் குவித்தனர். ஆலன் டொனால்டு 602 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். ஆக 26,845 ரன் மற்றும் 602 விக்கெட் அனுபவசாலிகள் இணைந்து இந்தியாவுக்கு எதிராக வியூகம் வகுத்து வருகின்றனர்.

சுழலில் வீக்

சுழலில் வீக்

தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் டும்னி மற்றும் டி காக் ஆகியோர் ஸ்பின் பந்து வீச்சில் திணறக்கூடியவர்கள். எனவே சுழற்பந்தை லாவகமாக அடித்தாடும் ஹஸ்சி அந்த இரு பேட்ஸ்மேன்களுக்கும் சிறப்பு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

ரவீந்திர ஜடேஜா பந்தை எதிர்கொள்ள பயிற்சி

ரவீந்திர ஜடேஜா பந்தை எதிர்கொள்ள பயிற்சி

இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஒருவரை வலைப்பயிற்சியின்போது சுழல் பந்து வீசச் சொல்லி பயிற்சி எடுத்து வருகின்றனர் டும்னியும், டி காக்கும். அந்த இளைஞரிடம் இதுகுறித்து கேட்டபோது "இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவை போலவே பந்து வீசுமாறு என்னை கேட்டனர். அதேபோல நானும் பந்து வீசினேன்" என்று கூறினார். எனவே ஜடேஜாவின் ஸ்பின்னுக்கு தென் ஆப்பிரிக்க வீரர்கள் பயப்படுவதாகவே தெரிகிறது.

ஷாட் பிட்ச் போட்டு பவுன்சர் பயிற்சி

ஷாட் பிட்ச் போட்டு பவுன்சர் பயிற்சி

மோர்னே மோர்க்கல் மற்றும் வெய்ன் பர்னெல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் மேற்கொள்ளும் பயிற்சியை ஆலன் டொனால்டு மேற்பார்வையிட்டு வந்தார். மோர்க்கலை பெரும்பாலும் ஷாட் பிட்ச் பந்து வீசச் சொல்லி பயிற்சியளித்தார் ஆலன் டொனால்ட். வெய்ன் பர்னெல்லை ஃபுல் லென்த்தில் வீசினார்.

கத்துகிட்ட மொத்த வித்தையையும் சமாளிக்கனும்

கத்துகிட்ட மொத்த வித்தையையும் சமாளிக்கனும்

கிறிஸ்டனும், ஹஸ்சியும், இந்தியாவில் இருந்து கத்துகிட்ட மொத்த வித்தையையும் இந்தியாவுக்கு எதிராகவே இறக்கி வருகிறார்கள். எப்படி சமாளிக்கப்போகிறது இந்தியா?

Story first published: Wednesday, February 18, 2015, 17:25 [IST]
Other articles published on Feb 18, 2015
English summary
To combat the defending champions, the South African team management has brought in experience worth 26,845 runs and 602 wickets at the international level.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+