மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இன்ஸ்டாகிராம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மூலமாக விளம்பரம் தேடிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களை செய்யும் பிஆர் ஏஜென்சி ஆட்களிடம் இருந்து ரிஷப் பண்ட் வெளியேறி வர வேண்டும் என்று முன்னாள் வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி அறிவுறுத்தியுள்ளார்.
ஒலிம்பிக் தொடரில் நேற்றிரவு ஈட்டி எறிதல் விளையாட்டுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். கடந்த முறை தங்கம் வென்ற அவர், இம்முறை வெள்ளி வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி கொடுத்துள்ளார். இதனால் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருந்தார். அதில், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால், இந்த பதவில் லைக் மற்றும் கமெண்ட் செய்யும் லக்கி வின்னர் ஒருவருக்கு ரூ.1,00089 கொடுப்பேன். அதேபோல் கவனத்தை ஈர்க்கும் 10 பேருக்கு விமானத்தில் பயணிக்க டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
இந்தியாவுக்கு வெளியிலும் எனது சகோதரருக்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வீரராக இருந்து கொண்டு நீரஜ் சோப்ரா மூலம் ரிஷப் பண்ட் விளம்பரம் தேடி கொள்ளவே இப்படியான செயல்களில் செய்வதாக பலரும் கருத்து கூறி வந்தனர்.
இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி ரிஷப் பண்ட் கருத்துக்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். அதில், இதுபோன்ற பிஆர் ஆட்களிடம் இருந்து ரிஷப் பண்ட் வெளியில் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களால விபத்தில் ஏற்பட்ட காயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த ரிஷப் பண்ட், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார்.

இதுவரை ரிஷப் பண்ட்-ன் பழைய ஆட்டத்தை ரசிகர்கள் பார்க்கவில்லை என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் சுயரூபம் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிஆர் ஏஜென்சியில் மூலம் கவனம் ஈர்ப்பதை நிறுத்திவிட்டு, ரிஷப் பண்ட் தனது பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.