ஆசிய விளையாட்டு-சோம்தேவ், சனம் ஜோடி மூலம் 6வது தங்கம்

இன்று நடந்த ஆடவர் இரட்டையர் போட்டியில் சோம்தேவ் -சனம் சிங் ஜோடி சீனாவின் காங், லீ ஜோடியை 6-3, 6-7, 10-8 என்ற கணக்கில் டை பிரேக்கர் மூலம் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
அதேபோல கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா, விஷ்ணுவர்த்தன் ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இறுதிப் போட்டியில், இந்திய ஜோடி 6-4, 1-6, 2-10 என்ற கணக்கில் தோல்வியுற்றது.
முன்னதாக இன்று காலை நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு சோம்தேவ் தகுதி பெற்றார். இதன் மூலம் அவருக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications